ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்

சன் தொலைக் காட்சியின் நிஜங்கள் தொடர் நிகழ்ச்சியில் வழக்கமான குடும்ப பிரச்சினைகள் இல்லாமல் வித்தியாசமாக சமூக அக்கரையோடு சிலரை அழைத்துப் பேசுவது பாராட்டத்தக்கது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்பவர்களுடன் குஷ்பு பேசியது அவர்கள் சேவைக்கு ஒரு பாராட்டு தெரிவித்தது போன்று இருந்தது..

வியாழன், 16 பிப்ரவரி, 2017

வழக்கு ஒரே நாளில் முடியுமா?


சன் டீவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் வசுந்தராவுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடர்ந்த காவல்துறை அதிகாரி சித்தார்த் நீதிமன்றத்திற்கு வரமுடியாதபடி சதி செய்து வெளியூரில் அடைத்துவிடுகிறார்களாம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தயாரிப்பாளர் இயக்குனர் இல்லாத தொடர்களா?சந்திர லேகா தொடரில் தனித்தீவில் தங்கவைப்பதற்காக அழைத்துச் செல்கிறார்கள்
முதலில் காரில் சென்று பிறகு படகில் பயணித்து அத்தீவில் உள்ள வீட்டிற்குப் போய்ச் சேருகிறார்கள் என்று காண்பித்தார்கள். அபியை கடைத்தெருவிற்கு அனுப்பிவிட்டு வில்லனிடம் தகவல்சொல்லி அபியைக் கடத்தச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் அவ்வளவு நேரம் பயணம் செய்து சென்ற அத்தீவிலிருந்து சில நிமிடங்களில் அங்கு வந்து அபியைக் கடத்திச் செல்வதாகக் காட்டுவது ரசிகர்கள் காதில் பூ சுற்றும் வேலைதானே!

சனி, 28 ஜனவரி, 2017

ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'?

ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'?

சன் டீவி யின் தொடர்கள் எல்லாவற்றையும் 1000 எபிசோட்டுக்குமேல் ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. திரும்ப திரும்ப ஒரேமாதிரியான சம்பவங்களை உருவாக்கி கதையை இழு இழு என்று இழுத்து தொடரை நீட்டித்துக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்து -பார்ப்பவர்களுக்கு போரடிக்கச் செய்து வருகிறார்கள்.