ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'?
சன் டீவி யின்
தொடர்கள் எல்லாவற்றையும் 1000 எபிசோட்டுக்குமேல் ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. திரும்ப திரும்ப ஒரேமாதிரியான சம்பவங்களை உருவாக்கி கதையை இழு இழு
என்று இழுத்து தொடரை நீட்டித்துக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்து -பார்ப்பவர்களுக்கு
போரடிக்கச் செய்து வருகிறார்கள்.
வம்சம் தொடரில்
வில்லன் திரும்பத் திரும்ப தப்பித்துப் போவதாக காண்பித்து ஒருவழியாக அவன் பிடிபட்டதாக
காண்பித்திருக்கிறார்கள்.யி
பிரியமானவள் தொடரிலும்
கிரி மிகுந்த சாமர்த்தியசாலியாகக் காட்டவேண்டும் என்பதற்காக எல்லா போலிஸ் அவன் செய்யும் தகிடுதத்தங்களை கண்டுபிடிக்க
முடியாமல் இருப்பதாகக் காட்டி பார்ப்பவர்களை முட்டாளாக்க நினைப்பது சரிதானா?
வாணி ராணி தொடரில்
ஆர்யாவும் அவனது தந்தையும் ஜெயிலிலிருந்தே மிகச் சுலபமாகத் தப்பிப்பதாகவும் அவர்களைக்
கவுதம் பிடிக்க படாத பாடு படுவதாகவும் காண்பிப்பதும்கூட
நீட்டிக்கச் செய்வதற்கான யுத்தியே தவிர கதைக்கு
சுவைகூட்டும் விஷயமல்ல.
தெய்வமகள் தொடரில்
காயத்ரிக்கு நாட்டில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் உடனுக்குடன் தெரியுமாம் அதை வைத்து
பிரகாஷுக்கும் சத்தியாவிற்கும் புதுப்புது பிரச்சினைகளாக உருவாக்கிக் கொண்டே இருப்பாளாம்.
பொன்னூஞ்சல் ,
கேளடிகண்மணி போன்ற தொடர்களில் முதலில் அறிமுகப் படுத்தப்பட்ட பாத்திரங்களை விடுத்து
புதுப் புது பாத்திரங்களைப் புகுத்தி புதுமை செய்து பார்த்துக் கொண்டிருகிறார்கள்.
இவை அனைத்தும் எதற்காக தொடர் 1000 எபிசோடுகளுக்குமேல் ஓடியதாகக் காண்பித்துக் கொள்ளத்தானே!
ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கதை இருக்கவேண்டும் புதுப்புது சம்பவங்கள் இருக்க வேண்டும்
பார்க்க சுவைகூட்டுவதாக இருக்கவேண்டும் என்றுதானே ரசிகர்கள் விரும்புவார்கள்.. ஒரு வார கதை, ஓரு மாத கதை, 10 வார கதை என்று புதிய
அமைப்பில் தொடர்களை ஒளிபரப்ப முயற்சி எடுக்கலாமே சன் தொலைக்காட்சியினர் கவனிப்பார்களா?
புது தொடர்கள்
கங்கா, நந்தினி, தேவயாணி போன்றவை வித்தியாசமக இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா??
///ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'?/// ஹா ஹா ஹா ரொம்பவும்தான் நல்லா நொந்துபோயிருக்கிறீங்கபோல? நான் சீரியல் பார்ப்பதை நிறுத்தி 4/5 வருடங்களாகுது.. வெறுத்தே போச்சு.. 100/200 எனில் சந்தோசம்.. 500 என்றாலே அலர்ஜி வருது ஆனா இப்போ எல்லாம் 1000 தாண்டுவது பாஷனாகிப்போச்சு:)
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
நீக்குவெளில் செல்லும் பழக்கம் இல்லாதவர்களுக்கு டீவி பார்ப்பதும் ஒரு பொழுது போக்கு. எத்தனை நேரம்தான் செய்திகளையும் மிருகங்களையும் பார்த்துக் கொண்டே இருப்பது என்று சீரியல்களையும் பார்க்கலாமே! அவற்றில் பொறுக்க முடியாமல் இப்படி எழுதியிருக்கிறேன். வேறு இல்லை
நீக்குசிரமம் தான்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
நீக்குநீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி