செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

தொடரை மெகா தொடர் ஆக்குவதற்காக இப்படியா செய்வது?

சன் தொலைக்காட்சியில் பகல்நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பொன்னூஞ்சல்.  இதன் கதாநாயகன் கதாநாயகி இருவரையம் ஓரம்கட்டிவிட்டு (அவர்களுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டார்கள் போலிருக்கிறது) இடையில் வந்த பிரியாவை சுற்றி கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தொடரை மெகாதொடர் ஆக்குவதற்காக இப்படியா ரசிகர்களை முட்டாளாக்குவது.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சன் டீவியின் சறுக்கல்

சன் டீவியின் சறுக்கல்

அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி வந்த நேரத்தில்  ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 10.30 க்கு ஒளிபரப்பாகி வந்தது. என்ன காரணத்தினாலோ திடீரென இத்தொடர் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஏதாவது இட்டு நிரப்ப வேண்டுமே என்று காமெடி ஜங்ஷன் என்ற பெயரில் ஒரு காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தொடங்கினார்கள். வழக்கமாக சன் சிங்கருக்கு செய்தது போல எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.  

புதன், 3 ஆகஸ்ட், 2016

இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக

இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக

மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன..ஆனால் அது போன்ற தொடர்கள் சன் தொலைக் காட்சியில் இதுவரை ஒளிபரப்பப்படாமல் இருந்தது.
நேரடியாக தமிழில் தயாரிக்கப் பட்ட தொடர்கள் மட்டுமே இடம் பெற்று வந்தன.  சமீப காலமாக அதுபோன்ற தொடர்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளது. இது சன் தொலைக் காட்சியின் ரசிகர்களை பெரிதும்  கஷ்டப்படுத்துவதாக உள்ளது.