‘’விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்’’
, ‘’ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும்’’
என்ற அறிவிப்புகளோடு ஏதோ ஒரு விதத்தில் புதுமைகளை அவ்வப்போது செய்து வரும் திருபிக்சர்ஸ் இப்போது சன் தொலைக்காட்சி
மூலமாக நாதஸ்வரம் தொடரில் ஒரு நாளைய நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி ஒரு கின்னஸ்
சாதனை செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இதில் நடித்த நடிக நடிகையர் அனைவருமே சரியான நேரத்தில் காட்சிகளில்
தோன்றி தங்களுக்குள்ள வசனங்களை மறக்காமல் மிகச் சரியாக பேசியது நிகழ்ச்சியின்
வெற்றிக்கு உறு துணையானது. வசனங்கள் டப்பிங் செய்யப்படாமல் நேரடியாக இடம் பெற்றது
ஒரு விஷயம், பின்னணி இசை அவ்வப்போதே இசைக்கப் பட்டது இரண்டாவது, நிகழ்ச்சி
முழுவதும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது மூன்றாவது, கேமராவை ஒருவரே தூக்கிக் கொண்டு
அந்த எபிசோடை படமாக்கியாது நான்காவது சிறப்பு என்று அந்த நேரடி ஒளிபரப்பை வெற்றிகரமாக
ஒளிபரப்பி அசத்திவிட்டது நாதஸ்வரம் குடும்பம்.
இயக்குனர் திருமுருகன் படம்பிடுத்த கேமராமேனை (அவரது பணியில் இடையூறு
செய்யாமல்) கண்ணாடி மூலமாகக் காண்பித்து கௌரவித்தது குறிப்பிடத் தக்கது. மற்ற வெளி
சத்தங்கள் இல்லாமல் பார்த்துக்கொண்ட உள்ளூர்காரர்களையும் மறவாமல் குறிப்பிட்டு நன்றி
சொன்னார் இயக்குனர். மொத்தத்தில் நாதஸ்வரம் தொடரின் ஆயிரமாவது எபிசோடை நேரடியாக
ஒளிபரப்பி சாதனை படைத்துள்ள இயக்குனரை ஊக்குவிக்க பாராட்டத்தான் வேண்டும்.
ஆயிரமாவது எபிசோடா? தப்பிச்சேண்டா சாமி! எங்க வீட்டுல சன் டிவி இல்லை!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்குஇயக்குனர் திருமுருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇயக்குனருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுகிறேன். கருத்துப் பதிவுக்கு நன்றி. உங்கள் பதிவிலுள்ள ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தி விடுகிறேன். நன்றி.
நீக்கு