சின்னச் சின்ன சிந்தனைகள்
சனி, 3 ஜூன், 2017
தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு
இனிமையான ஓசை இருந்திருக்காது.
ஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது தோற்பதோ பெரும்பாலும் அவர் என்ன செய்கிறார் என்பதால் அல்ல, ஆனால் அதை வேறு ஒருவரை எவ்வளவு செய்யவைக்க முடிகிறது என்ற திறமையைப் பொறுத்தது.
செய்யப்பட்ட செலவுகள் பெரும்பாலும் மறந்துவிடும்
ஆனால் அதன் தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
ஹென்ரி ஃபோர்டு ஆடோமொபைல் தொழிலில் முதல் ஆண்டு
நஷ்டமடைந்தார், இரண்டு
ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது இரண்டாவது முயற்சியும் தோல்வியடைந்தது. என்றாலும் அவரது மூன்றாவது கம்பெனி நன்றாக இயங்கியது.
உங்கள் மூளையைப் பயன்படுத்த கட்டாயப் படுத்தப்
படாவிட்டால், நீங்கள்
மனதளவில் சோம்பேறியாக மாறி உங்கள் திறமையை எப்போதும் பயன்படுத்த மாட்டீர்கள்.
நெப்போலியன் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடுவாராம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேர
குறைந்த தூக்கம் உங்கள் வேலை செய்யும் ஆண்டுகளில் ஐந்து வருடத்தைக் கூட்டும்.
உங்கள் வீட்டில் யார் பாஸ் என்று உங்களுக்குத்
தெரியவில்லை என்றால் நீங்கள் அதிக சந்தோஷமாக இருப்பீர்கள்.
நீங்கள் முடிவு எடுக்கும் போது எல்லோரையும்
மகிழ்விக்கும் படியான ஒரு வழி எதுவும் கிடையாது.
அமைதியாகவும், தெளிவாகவும் உங்கள் பக்க உண்மைகளைப்
பேசுங்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அறிவுகுறைந்த, மந்த புத்திக்காரரும் கூட அவர்களுக்கென்ற
நியாயத்தைச் சொல்வர்.
திறந்த மனதோடு வாழப் பழகுங்கள் நல்ல ஐடியாக்கள்
வந்து சேர்வதற்கு வசதியாக.
ஒரு மனிதர், ஒரு சில மோசமான ஐடியாக்களை தேர்ந்தெடுக்காமல், நல்ல மாற்று வழியை தேர்ந்தெடுக்க
கற்க முடியாது.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
Self improvement
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னே உண்மைகள்...!
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
நீக்குஅத்தனையும் முத்துகள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி. ஊக்குவிப்பு வார்த்தைகளுக்கும் நன்றி
நீக்கு//நெப்போலியன் காலையில் சீக்கிரமாகவே எழுந்துவிடுவாராம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேர குறைந்த தூக்கம் உங்கள் வேலை செய்யும் ஆண்டுகளில் ஐந்து வருடத்தைக் கூட்டும்.//
பதிலளிநீக்குமிகச் சரியான உண்மை. ஒரு மணிநேரம் ஏழியா எழும்பினால்.. பாதி நாள் வேலைகள் முடிந்துவிடும் காலையிலேயே.
வருகைக்கு நன்றி.
நீக்குபாதி நாள் வேலைகள் முடிந்துவிடும் காலையிலேயே.-- என்பது உண்மைதான்
//உங்கள் வீட்டில் யார் பாஸ் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் அதிக சந்தோஷமாக இருப்பீர்கள்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா உண்மைதான், ஒவ்வொரு விசயத்துக்கு ஒவ்வொருவர் பொஸ்ஸ்:)
வெளியூர் சென்றிருந்ததால் உடன் பறதிலிடமுடியவில்லை தாமதத்திற்கு மன்னிக்கவும்
நீக்கு