திங்கள், 15 மே, 2017

எப்படிப் பேசாமல் இருப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள்.

சின்னச் சின்ன சிந்தனைகள்

 மிக மிக நல்ல ஐடியாவுக்காக காத்திருக்காதீர்கள், உங்களிடம் உள்ள நல்ல ஐடியாவை செயல்படுத்துங்கள். அதைவிட நல்ல ஐடியாவும் மிக மிக நல்ல ஐடியாவும் தொடர்ந்து வரும்.

 இதயத்தில் சிங்கமாக இருங்கள் நரியின் தந்திரத்தை மறந்து விடாதீர்கள்.

 சிறிதாகவும் மெல்லிதாகவும் இருப்பது அழகாக இருக்கும். அது திறனுள்ளதாகவும், ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமானதாகவும் இருக்கும்.

 ஒவ்வொரு நாளும்மணி நேரம் விசுவாசமாகவும் நேர்மையாகவும் வேலை செய்தால், பதவி உயர்வு பெற்று ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்யும்படி மேல் நிலைக்கு உயர்வீர்கள்.


 நீங்கள் சரியான பாதையிலேயே போய்க் கொண்டிருந்தாலும், அதில் உட்கார்ந்து விடக்கூடாது -- மற்ற வாகனங்களால் இடிபட்டு விடுவீர்கள்

 வேலையில் சேர்ந்த புதிதில் நீங்கள் என்ன சம்பாதிக்கிறீர்கள் என்பதை விட என்ன கற்றுக் கொள்கிறீர்கள் என்பதே மிக முக்கியம்

 எப்படிப் பேசுவது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, எப்படிப் பேசாமல் இருப்பது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

 அவசரக்காரர்கள் பொதுவாக நிமிடங்களை சேமிப்பார்கள், பல மணி நேரத்தை வீணாக்கிய பிறகு.

உங்கள் வார்த்தைகளையே நீங்கள் விழுங்க வேண்டிய நிலையைவிட மிக மோசமான நிலை வேறு ஏதும் இருக்க முடியாது.

 சரியான, தவறில்லாத, நல்ல முடிவை எடுங்கள்அது தவறானது என்றால் சீக்கிரத்திலேயே தெரிந்துவிடும்

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி . உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

      நீக்கு
  2. மிக நல்ல அறிவுரைகள்..

    //நீங்கள் சரியான பாதையிலேயே போய்க் கொண்டிருந்தாலும், அதில் உட்கார்ந்து விடக்கூடாது -- மற்ற வாகனங்களால் இடிபட்டு விடுவீர்கள்
    //
    மிகவும் பிடித்துக்கொண்டது இது எனக்கு. நீங்கள் இங்கு வோட் போடுவதில்லையா? நான் பண்ணிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி . உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
      (வோட்டுப் போட முயல்வதற்குக் கூட முடியவில்லை. காரணம் கடவுச் சொல் மறந்துவிட்டது, க சொ வை மீண்டும் பெற முயல் கிறேன் முடியவில்லை)

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.