வியாழன், 4 மே, 2017

அறிவாளி கோபப்படுவதால் விவேகத்தை இழக்கிறார்

சின்னச் சின்ன சிந்தனைகள்

ü     ஒரு சங்கிலியின் பலமில்லாத வளையம் பெரிய விபத்தை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே பலமில்லாத அந்த வளையத்தைக் கண்டுபிடியுங்கள், உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுங்கள்.

ü   ஒரு நாள் செய்வோம் என்றால் அந்த நாள் என்றுமே இல்லை இன்றுதான் அந்த வேலையைச் செய்யத் துவங்குவதற்கான நாள்.


ü   நான் தவறு செய்துவிட்டேன் என்று ஒத்துக் கொள்வது நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக வளர்ந்துள்ளீர்கள் என்று காண்பிக்கும் எளிய வழி.


ü   கப்பல்கள் கடற்கரையில் மிகவும் பத்திரமாக இருக்கும். ஆனால் அவை அங்கு நிற்பதற்காக உருவாக்கப் படவில்லையே! ஒரு இளைஞனுக்கு மிக முக்கியமானது நற்பெயரையும்,, நற் குணத்தையும் (நல்லொழுக்கத்தையும்) ஏற்படுத்திக் கொள்வதே.

 சிலர் தனது நற்பெயரைக் காத்துக் கொள்வதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள்ஆனால் தனது நற்குணத்தை இழந்துவிடுகிறார்கள்,.

 உங்கள் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் ஏனென்றால் அங்குதான உங்கள் நேரத்தை அதிகம் செலவு செய்யப் போகிறீர்கள்.


 ஒரு அறிவாளி கோபப்படுவதால் தன் விவேகத்தை இழந்து விடுகிறார்..

4 கருத்துகள்:

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.