ஞாயிறு, 29 மார்ச், 2015

விவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதுதான் தொடர் கலாச்சாரமா?


சன் தொலைக் காட்சியில் அமுத மொழிகள், இந்த நாள் இனிய நாள் போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப் பட்டுவிட்டன என்று யார் சொன்னது? (சாரி நான் தான் எழுதினேனா?) இல்லை இல்லை அவை இருக்கின்றன சன் தொலைக் காட்சியின் நிகழ்ச்சி நிரல்படி அதாவது 6.15 க்கு அமுத மொழிகள்,  6.30 க்கு ராசிபலன்.  6.45 க்கு இந்த நாள் இனிய நாள் என்று தான்  29.3.2015 ஞாயிறு காலை வரை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம் அந்த நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒளிபரப்பப் படவில்லை என்றே தோன்றுகிறது. வருகிற வாரங்களிலாவது இவற்றை இடம்பெறச் செய்வார்கள் என்று நம்புவோமா?

சன் தொலைக்காட்சியின் நாதஸ்வரம் தொடரில் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ள பிரகாஸை மைத்துனர் பொன்னுரங்கம் ராமேஷ்வரம் லாட்ஜில் தனியாக விட்டு விட்டுப் போகும்போதே பார்க்கும் ரசிகர்கள் யூகித்திருப்பார்கள் அவர் வரும் போது பிரகாஷ் அங்கு இருக்க மாட்டார் என்று.  கதையிலும் அப்படியே தான் காண்பிக்கிறார்கள்.  தொடரை நீட்டிக்கும் இந்த பழைய டெக்னிக்குகளையே திருமுருகனும் பின்பற்றுவது ஏமாற்றத்தைத் தருகிறது.


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சக்தி தொடரில் கதாநாயகி சக்தி கொடுமைப் படுத்தும் தன் கணவரை விட்டு விட்டு தன் முன்னாள் காதலன் ஜீவாவுடன் போய்விடுகிறார் என்று கதையை முடித்து வைத்திருக்கிறார்கள். (ஆர்யா சக்தியைக் கொடுமை படுத்திய போதெல்லாம் பேசாமல் அவனுடன் வாழ்ந்துவிட்டு இப்பொது பிரிவது ஏன் என்பதும் புரியாத புதிர்தான்) கணவன் உயிரோடு இருக்கும் போது, விவாகரத்து (டைவர்ஸ்) ஆகாமல் இன்னொருவருடன் வாழச் செல்வதை தொடர் தயாரிப்பாளரும் சன் தொலைக் காட்சியும்  காண்பிப்பது முறையா? இது போதாது என்று கதாநாயகி சக்தி தன் தங்கைக்கும் அதேபோல அவளது கணவன் கட்டிய தாலியைக் கழட்டிப் போடுட்டுவிட்டு அவளுடைய காதலனைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறாராம். ‘’’விவாகரத்து வாங்கிவிட்டு கல்யாணம் செய்து கொள்கிறேன்’’’ என்று சொல்வது போலவாவது காட்சியை அமைத்திருக்கலாம்.  .   

2 கருத்துகள்:

  1. சக்தி முடிவு சரியில்லை என்று வீட்டில் சொன்னார்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். அடுத்த தொடர் துவங்கும் தேதியை முடிவு செய்துவிட்டு முந்தைய தொடரை முடிக்க வேண்டும் என்றால் இப்படித்தான் அவசர அவசரமாக முடித்து வைத்துவிடுவார்கள். பல சீரியல தொடர்கள் இப்படி அவசர கோலத்தில் முடிக்கப் பட்டுள்ளன. இவர்களை யார் கேட்பது??

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.