சந்திர லேகா தொடரில் தனித்தீவில் தங்கவைப்பதற்காக
அழைத்துச் செல்கிறார்கள்
முதலில் காரில் சென்று பிறகு படகில் பயணித்து
அத்தீவில் உள்ள வீட்டிற்குப் போய்ச் சேருகிறார்கள் என்று காண்பித்தார்கள். அபியை கடைத்தெருவிற்கு
அனுப்பிவிட்டு வில்லனிடம் தகவல்சொல்லி அபியைக் கடத்தச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம்
அவ்வளவு நேரம் பயணம் செய்து சென்ற அத்தீவிலிருந்து சில நிமிடங்களில் அங்கு வந்து அபியைக்
கடத்திச் செல்வதாகக் காட்டுவது ரசிகர்கள் காதில் பூ சுற்றும் வேலைதானே!
அத்தீவிற்கு கஷ்டப்பட்டு சென்ற அபியின் அப்பா சித்ம்தார்த்தும் சந்திராவும் அபியைப் பார்த்துவிடு கிறார்களாம். அபி அவர்களிடம் ஓடிவரும்போது அபியை
தூக்கிக் கொண்டு ஓடுகிறானாம் கட்டிடங்களோ மரங்களோஇல்லாத அந்த தீவில் அவர்கள் கண்ணில்
படாமல் தப்பி விடுகிறானாம். போலிஸ்காரர் துப்பாக்கிகூட இல்லாமல் அங்கு சென்றார் என்பதை
நம்பமுடியவில்லையே. இதைவிட வேடிக்கை அவர்கள் இருவரையும் அந்த வீட்டுக்குள்
வைத்து பூட்டிவிடுவது என்றால் அவர்களை மயக்கமடையச்
செய்ய தேவையானவற்றை அத்தீவில் கிடைக்கச் செய்திருப்பது கதையை நீட்டத் தேவையானதாக இருக்கலாம்.
அதற்காக பார்ப்பவர்களை முட்டாளாக நினைக்கலாமா?
தாமரை தொடரில் கதாநாயகி காணாமல் போனதாகவும்
அவளை வில்லன்தான் கடத்தி இருப்பார் என்று அவனுடைய வீட்டிற்கு காவல்துறை அதிகாரி சவத்திரி
செல்வது சரி. டாக்டர் முத்துலட்சுமி அங்கு வருவதாகக் காண்பிப்பதும் அதே ரகம்தான்.
புதிதாகத் துவங்கப்பட்ட தொடர்களில் பாம்பு
மறுபிறவி அமானுஷ்யம் என்று மாறுபட்ட கதைகளைப் பார்க்க வித்தியாசமாகவும் எதிர்பார்ப்பைத்
தூண்டுவதாகவும் இருக்கிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆமாம் தேவயாணி யமுனா
போன்ற தொடர்களுக்கு நடிக நடிகையர் தொழில் நுட்பக்கலைஞர்கள் பெயரையும் இயக்குனர் பெயர்களையும்
காண்பிக்காதது ஏனோ? எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்றும் காண்பிக்கப் படவில்லையே!
இவற்றிற்கு காரணங்கள் ஏதும்
இருக்குமோ
சிரமம் தான்...
பதிலளிநீக்குஅன்புடையீர் வணக்கம்
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
உண்மைதான்... சிலது மர்மமாகவே இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி