சனி, 3 டிசம்பர், 2011

ஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஆட்டோ கட்டணம்தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஆறு ரூபாய் என்றும் அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால் அரசு நிரணயித்த அந்த கட்டணத்தை எந்த ஆட்டோக் காரரும் பின் பற்றவில்லை.. மீட்டர் போட்டு யாரும் ஓட்டவில்லை.

ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறிய போதும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் (டீசலில் ஓடும் ஆட்டோக்களாக இருந்தாலும்) கட்டணத்தை உயர்த்திக் கேட்டார்கள் அதிக கட்டணமே வாங்கி னார்கள். இதை முறைப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பெட்ரோல் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை ஏறியது ஏறியதுதான். இப் போது குறைந்தபட்ச கட்டணமாக முப்பது ரூபாய் கேட்கிறார்கள். ஒரு கிலோமீட்டருக்கு பதினைந்து ரூபாய், பதினாறு ரூபாய் அல்லது இருபது ரூபாய் என வாய்க்கு வந்ததை கட்டணமாகக் கேட் கிறார்கள். வாடகைக் காருக்கே கி்லோமீட்டருக்கு பத்து ரூபாய் தான் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதாவது ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த அரசு முன் வருமா? உடனடியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்யவேணட்டும். எல்லா ஆட்டோக்களுக்கும மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா?,

4 கருத்துகள்:

 1. Blogger bantlan with love said...

  Nice Post Great job.
  Thanks for sharing

  Thanks for visiting this site and posting a comment.

  பதிலளிநீக்கு
 2. Auto drivers are the villains of chennai for people coming from outside.They simply want to make money in one or two trips per day and enjoy the rest of the day. Number of autos running in the city are more than required. Its the easy self employment when no other business is feasible. Moreover there are powerful people in politics and police owns many autos in the city. So they dont want to regulate the system. Someone like you should find the ways and means to talk to concerned authorities to regulate it.

  பதிலளிநீக்கு
 3. Sankarasubramanian Mohan said...
  "Auto drivers are the villains of chennai.......you should find the ways and means to talk to concerned authorities to regulate it.//

  As rightly pointed out by you we have to do something on this matter. We will take up this matter with the concerned people. Thank you for the encouragement
  Avainaayagan

  பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.