செவ்வாய், 21 ஜனவரி, 2014

ஐம்பெருங்காப்பியங்கள் கூட தெரியாத இளந்தலைமுறையினர்


 விஜய் டீவியின் ‘நீயா நானா வில் ஆங்கிலப்புத்தாண்டை எப்படி கொண்டாடினீர்கள் என்று கோபி கேட்டபோது மோட்டார் சைக்கிள் ரேஸில் 10 கிமீ தூரத்தைக்கடந்து யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்குப் பரிசு தந்து கொண்டாடினோம் என்றார் ஒருவர்.  உடனே கோபி அதனைக்கண்டித்து பொது இடங்களில் வேகமாக ஓட்டுவது தவறு. அதிலும் கொண்டாட்ட நேரத்தில் பலரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவார்கள்  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும் தவறு இனியாவது இது போன்ற பொது இடங்களில் இப்படிப்பட்ட போட்டிகளை நடத்தாதீர்கள் என்று அவர்களைத் திருத்தியது அவரது பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறது.                                                   பாராட்டப் பட வேண்டிய நிகழ்வு.


சொல்லுவதெல்லாம் உண்மை  
வாய்மையே வெல்லம்



பொங்கல் அன்று கிட்ட தட்ட எல்லா சேனல்களிலும் ஏதோ ஒரு தலைப்பில் பட்டிமன்றம் ஓளிபரப்பினார்கள். நல்ல வேளையாக வெவ்வேறு நேரங்களில் அவற்றை இடம்பெறச் செய்ததால் பட்டி மன்ற ரசிகர்கள் எல்லா பட்டிமன்றங் களையும் பார்த்திருப்பார்கள். வசந்த் தொலைக்காட்சியில் ‘வாய்மையே வெல்லும்’ நிகழ்ச்சியும் ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றன. அதனால் இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்க்க நினைப்பவர்கள் ஏதாவது ஒன்றைத்தான் பார்க்க முடியும். இவற்றை வெவ்வேறு நேரங்களுக்கு மாற்றக்கூடாதா?’


 .சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘’தெய்வமகள்’’ நெடுந்தொடரில் பிரகாசின் அண்ணி காயத்ரி விடுதலைப் போராட்டத் தியாகியான தன் மாமானாரிடம் தன் ஜாக்கட்டிற்கு ஹூக் தைக்கச் சொல்கிறார். அவரது மனைவி அந்த வேலையைச் செய்கிறேன் என்று சொல்ல ‘இல்லை இல்லை இதை அவர்தான் செய்ய வேண்டும்’ என்று சொல்லிய காயத்ரி தன் மாமியாரிடம் தனக்கு கால் அமுக்கிவிடச் சொல்கிறார் அவரும் வேறு வழி இல்லாமல் காலை அமுக்கி விடுகிறாராம். மாமியார் மாமனாரைக் கொடுமைப் படுத்துவதாக காண்பிப்பதே தவறு என்றால் மருமகளுக்கு மாமியார் கால் அமுக்கிவிடும் கொடுமையை எல்லாம் காட்டத்தான் வேண்டுமா?  இது இயக்குனரின் குரூர புத்தியைத் தான் காட்டுகிறது இனியாவது இது போன்ற காட்சிகளைத் தவிர்ப்பார்களா?

அதே தொடரின் இன்னொரு எபிசோடில் கணவன் பிரகாஷ் கோபித்துக் கொண்டதால் சத்யா தாய்வீட்டுக்கு வர சத்யாவின் தாய் ‘’ ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆன பிறகு எந்த விஷயமானாலும் கணவனுக்குத் தெரிவித்து கணவனின் அனுமதியோடுதான் செய்ய வேண்டும். இதை கணவன் எதிர் பார்ப்பதில் தவறில்லை. அதனால் அந்த எதிர்பார்ப்பின் படி எதையும் கணவனிடம் சொல்லி கணவனின் அனுமதியோடு செய்து அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும்.’’ என்று அறிவுரை சொல்லி சத்யாவை சமாதானப் படுத்தும் இடம் அருமை. இது போன்ற காட்சியை இடம் பெறச் செய்த இயக்குனரைப் பாராட்டத் தான் வேண்டும்.


பொங்கல் நாளில் எல்லா சேனல்களிலும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த நேரத்தில் தந்தி தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகை மலேசியா, ஆஸ்திரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் எப்படி வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகிறது என்று படக்காட்சிகளோடு காண்பித்தது அருமையாக இருந்தது.
 


 ‘’சொல்லுங்க அண்ணே சொல்லுங்க’’ நிகழ்ச்சியில்  ஐம் பெருங்காப்பியங்கள் எவை? ஐவகை நிலங்கள் எவை? என்ற கேள்விகளுக்கு கல்லூரி மாணவ மாணவியர் பதில் தெரியவில்லை என்று சொல்லாமல் வித விதமாக வித்தியாசமாக பதில் சொல்வது பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் இதைப் போன்ற மிக எளிய கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாத நிலையில் இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான் மிஞ்சுகிறது. 


மாற்றுத்திறனாளிகளுக்கான “’சேம்பியன்’ நிகழ்ச்சிக்கு சிறப்பு விரந்தினராக வந்திருந்த நடிகை பூஜா போட்டியாளர்கள் சிறப்பாக தங்கள் திறமைகளைக் காண்பித்த போது மிகவும் நெகிழ்ந்து போய் சிலருக்கு முத்தம் கொடுத்தது, சிலரைக் கட்டிப்பிடுத்து பாராட்டி ஊக்கப் படுத்தியது பாராட்டும் படி இருந்தது. அபிநயா என்ற காது கேளாத வாய் பேசமுடியாத சிறு பெண் மிக அழகாக அருமையாக நடனமாடியதைப் பாராட்டி தன் காதில் போட்டிருந்த தோடை கழட்டி அப்பெண்ணுக்குப் போட்டுவிட்டது நிகழ்ச்சியின் ஹை லைட்.  


4 கருத்துகள்:

  1. "சொல்லுங்க அண்ணே சொல்லுங்க" நிகழ்ச்சி எப்போது பார்த்தாலும் இன்றைய தலைமுறைகளின் பதில்களை நினைத்து வருத்தப்படுவேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி.இளைஞர்கள் வேடிக்கையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு தங்களது அறியாமையை இப்படி வெளிப்படுத்துகிறார்கள். இதைப்பார்க்கும் மற்ற இளைஞர்களாவது தங்களது அறியாமையை உணர்ந்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது.

      நீக்கு
  2. கத்தி போன்ற தொலைக்காட்சியால் காய்கறியும் நறுக்கலாம்; கழுத்தையும் நறுக்கலாம்; கருத்துக்கள் அருமை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nagendra Bharathi25 January 2014 20:42
      கத்தி போன்ற தொலைக்காட்சியால் காய்கறியும் நறுக்கலாம்; கழுத்தையும் நறுக்கலாம்; கருத்துக்கள் அருமை //

      தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.