வியாழன், 8 ஜூன், 2017

தோல்வி என்பது தாமதமே

சின்னச் சின்ன சிந்தனைகள்

 

உலகின் மிகப் பெரிய நெருப்பு கூட சரியான நேரத்தில் அணைக்கப் பட்டால் ஒரு பக்கெட் தண்ணீரில் அணைத்துவிட முடியும்.

தேவையெனில் ரிஸ்க் எடுக்கலாம், அது அதிவேகமாக செயல்படுவதில் இருந்து மாறுபட்டது.

பெரும்பாலும் புள்ளிவிவரங்கள் ஒரு குடிகாரன் விளக்கு கம்பத்தை பிடித்துக் கொள்ளவதைப் போன்று உபயோகப்படுத்தப் படுகிறது அது தன் வழிக்கு வெளிச்சம் தருவதற்காக இல்லை அவனது தடுமாற்றத்தை மறைத்துக் கொள்ளவே பயன்படுத்தப் படுகிறது

சனி, 3 ஜூன், 2017

தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.

சின்னச் சின்ன சிந்தனைகள்

படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது.

 

ஒரு மேனேஜர் வெல்வதோ  அல்லது தோற்பதோ பெரும்பாலும் அவர் என்ன செய்கிறார் என்பதால் அல்ல, ஆனால் அதை வேறு ஒருவரை எவ்வளவு செய்யவைக்க முடிகிறது என்ற திறமையைப் பொறுத்தது

 

செய்யப்பட்ட செலவுகள் பெரும்பாலும் மறந்துவிடும் ஆனால் அதன் தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.