வியாழன், 8 ஜூன், 2017
தோல்வி என்பது தாமதமே
சின்னச் சின்ன சிந்தனைகள்
உலகின் மிகப் பெரிய நெருப்பு கூட சரியான நேரத்தில்
அணைக்கப் பட்டால் ஒரு பக்கெட் தண்ணீரில் அணைத்துவிட முடியும்.
தேவையெனில் ரிஸ்க் எடுக்கலாம், அது அதிவேகமாக செயல்படுவதில்
இருந்து மாறுபட்டது.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
General,
Self improvement
சனி, 3 ஜூன், 2017
தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
சின்னச் சின்ன சிந்தனைகள்
படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு
இனிமையான ஓசை இருந்திருக்காது.
ஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது தோற்பதோ பெரும்பாலும் அவர் என்ன செய்கிறார் என்பதால் அல்ல, ஆனால் அதை வேறு ஒருவரை எவ்வளவு செய்யவைக்க முடிகிறது என்ற திறமையைப் பொறுத்தது.
செய்யப்பட்ட செலவுகள் பெரும்பாலும் மறந்துவிடும் ஆனால் அதன் தரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
Self improvement
புதன், 24 மே, 2017
ஆர்வம் இருக்கக்கூடிய எதிலும் வெற்றி பெற முடியும்.
சின்னச் சின்ன
சிந்தனைகள்
பிரச்சினையை தீர்ப்பதற்கு முதல்படி அதைச் செய்யத் துவங்குவது
தான்.
எப்பொழுதும் செய்வதற்கு என்று ஒன்று அதிகமாக இருக்கும்.
நாளைய வளர்ச்சிக்காக இன்றைய பொழுதை செலவு செய்யத் தயாராக இருங்கள்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
Self improvement
ஞாயிறு, 21 மே, 2017
‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்
சின்னச் சின்ன சிந்தனைகள்
பழைய அனுபவத்தின் அடிப்படையில் 90 சதவீத முடிவுகளை உடனடியாக எடுத்துவிடலாம், 10 சதவீத முடிவுகளுக்குத் தான் தீவிர பரிசீலனை தேவைப்படும்.
குறிப்பிட்ட பிரச்சினை எதைப்பற்றியும் நாம் யோசிக்காமல் இருக்கிறோம் என்றால் பொதுவாக நம் நேரத்தில் 95 சதவீதம் நம்மைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
General
வெள்ளி, 19 மே, 2017
வலி இல்லாமல் லாபம் இல்லை.
சின்னச் சின்ன சிந்தனைகள்
எழுந்து நின்று என்ன நினைக்கிறானோ அதைச் சொல்பவனிடம் தலைமைப் பதவி வந்து சேரும்.
யோசிக்கும் கஷ்டத்தை தவிர்க்கும்படியான சூழ்நிலை என்பது ஏதும் இல்லை
பட்டங்கள் காற்றை எதிர்த்து உயர்வதில்லை காற்றின் போக்கில் காற்றுடனேயே உயர்கின்றன.
உரசல் இல்லாமல் வைரம் பட்டை தீட்டப்படுவதில்லை சோதனை இல்லாமல் மனிதன் முன்னேற முடியாது
போட்டிகளில் தைரியமாகக் கலந்து கொள்ளாமல் மெடல்களைப் பெறமுடியாது
வலி இல்லாமல் லாபம் இல்லை. (No pain No gain)
சாதாரண மனிதர் தனது மூளையின் திறமையில் 10 சதவீதம் அளவிற்கே மேம்படுத்துகிறார்.
ஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும் செய்வதற்கு சில வேலைகள் இருக்கும் வரையில் வாழ்க்கையுடன் போராடும் அவசியம் ஏதும் இல்லை.
நீங்கள் விரும்புகின்ற வேலையை தேர்ந்தெடுத்து
அதில் சேருங்கள். உங்கள் வாழ்வில் ஒரு நாளும் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே தோன்றாது.
ஒரு மரத்தை வெட்ட 8 மணி நேரம் இருக்கிறது என்றால் கோடரியைக் கூர்மையாக்க அதிகமான நேரத்தை செலவிட வேண்டும்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
General
திங்கள், 15 மே, 2017
எப்படிப் பேசாமல் இருப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன சிந்தனைகள்
மிக மிக நல்ல ஐடியாவுக்காக காத்திருக்காதீர்கள், உங்களிடம் உள்ள நல்ல ஐடியாவை செயல்படுத்துங்கள். அதைவிட
நல்ல ஐடியாவும் மிக மிக நல்ல ஐடியாவும் தொடர்ந்து வரும்.
இதயத்தில் சிங்கமாக இருங்கள் நரியின் தந்திரத்தை மறந்து விடாதீர்கள்.
சிறிதாகவும் மெல்லிதாகவும் இருப்பது அழகாக இருக்கும்.
அது திறனுள்ளதாகவும், ஆற்றல்மிக்கதாகவும்,
சிக்கனமானதாகவும் இருக்கும்.
ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் விசுவாசமாகவும் நேர்மையாகவும் வேலை செய்தால், பதவி உயர்வு பெற்று ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை
செய்யும்படி மேல் நிலைக்கு உயர்வீர்கள்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது,
General
வியாழன், 4 மே, 2017
அறிவாளி கோபப்படுவதால் விவேகத்தை இழக்கிறார்
சின்னச் சின்ன சிந்தனைகள்
ü ஒரு சங்கிலியின் பலமில்லாத
வளையம் பெரிய விபத்தை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே பலமில்லாத
அந்த வளையத்தைக் கண்டுபிடியுங்கள், உடனடியாக சரி செய்ய நடவடிக்கை
எடுங்கள்.
ü ஒரு நாள் செய்வோம் என்றால்
அந்த நாள் என்றுமே இல்லை இன்றுதான் அந்த வேலையைச் செய்யத் துவங்குவதற்கான நாள்.
ü நான் தவறு செய்துவிட்டேன்
என்று ஒத்துக் கொள்வது நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக வளர்ந்துள்ளீர்கள் என்று காண்பிக்கும்
எளிய வழி.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது
திங்கள், 1 மே, 2017
கனவுகள் நனவாக தூக்கத்திலிருந்து விழித்து எழுங்கள்.
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
சின்னச் சின்ன சிந்தனைகள்
- ஒரு நேரத்தில் ஒரு வேலை
- பழையநிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் அதைத் திரும்பச் செய்யக்கூடாது.
-
உங்கள் கனவுகள் நனவாக வேண்டுமா அதற்கு சிறந்த வழி தூக்கத்திலிருந்து விழித்து எழுவதுதான்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது
ஞாயிறு, 30 ஏப்ரல், 2017
நம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே!
நம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே!
§ தன் வாயை மூடிக்கொண்டிருந்நால்
மீனும்கூட பிரச்சினையில் (தூண்டிலில்) மாட்டிக் கொண்டிருக்காது.
§ அனுபவம் என்ற ஒன்றை நீங்கள் ஏதும் செய்யாமல்
பெறமுடியாது.
§ பேசுவதற்கான திறமை நீங்கள் முன்னேறுவதற்கான குறுக்குவழி
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது
வெள்ளி, 28 ஏப்ரல், 2017
தன்னம்பிக்கையை இழப்பதே மிகப்பெரிய இழப்பு
சின்னச் சின்ன சிந்தனைகள்
§ யோசியுங்கள் நிச்சயமாக நல்லதொரு வழி இருக்கும்
§ எதையும் எதிர் பார்த்து இருங்கள்
§ நற் சிந்தனைகள் நன்மையே பயக்கும்.
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது
வியாழன், 27 ஏப்ரல், 2017
இடமறிந்து பேசுங்கள்
Ø சிந்தித்துப் பேசுங்கள்.
Ø சபை அறிந்து (இடம் அறிந்து) பேசுங்கள்
Ø சமயம் அறிந்து
பேசுங்கள்.
Ø உண்மையையே பேசுங்கள்
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது
புதன், 26 ஏப்ரல், 2017
நன்னம்பிக்கை நற்பயன் தரும்.
சின்னச் சின்ன சிந்தனைகள்
·
1 யோசியுங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்
·
2. எதையும் தள்ளிப் போடாதீர்கள் இன்றே செய்யுங்கள் இப்போதே செய்யுங்கள்
·
3. கேட்டால்தான் கிடைக்கும். (அழுகுற குழந்தைதான் பால் குடிக்கும்)
லேபிள்கள்:
சிந்தனைகள்,
பொது
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017
அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
வியாழன், 16 பிப்ரவரி, 2017
வழக்கு ஒரே நாளில் முடியுமா?
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
TV serials
செவ்வாய், 7 பிப்ரவரி, 2017
தயாரிப்பாளர் இயக்குனர் இல்லாத தொடர்களா?
சந்திர லேகா தொடரில் தனித்தீவில் தங்கவைப்பதற்காக
அழைத்துச் செல்கிறார்கள்
முதலில் காரில் சென்று பிறகு படகில் பயணித்து
அத்தீவில் உள்ள வீட்டிற்குப் போய்ச் சேருகிறார்கள் என்று காண்பித்தார்கள். அபியை கடைத்தெருவிற்கு
அனுப்பிவிட்டு வில்லனிடம் தகவல்சொல்லி அபியைக் கடத்தச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம்
அவ்வளவு நேரம் பயணம் செய்து சென்ற அத்தீவிலிருந்து சில நிமிடங்களில் அங்கு வந்து அபியைக்
கடத்திச் செல்வதாகக் காட்டுவது ரசிகர்கள் காதில் பூ சுற்றும் வேலைதானே!
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
சனி, 28 ஜனவரி, 2017
ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'?
ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் போனால்தான் நல்ல சீரியலா'?
சன் டீவி யின்
தொடர்கள் எல்லாவற்றையும் 1000 எபிசோட்டுக்குமேல் ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. திரும்ப திரும்ப ஒரேமாதிரியான சம்பவங்களை உருவாக்கி கதையை இழு இழு
என்று இழுத்து தொடரை நீட்டித்துக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்து -பார்ப்பவர்களுக்கு
போரடிக்கச் செய்து வருகிறார்கள்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)