ஞாயிறு, 15 மார்ச், 2015

மாற்றம் வேண்டும் என்பதற்காகவே நல்லனவற்றைக் கூட மாற்றுவதா?


 ஞாயிறன்று காலை

சன் டீவியின் நிகழ்ச்சி நிரல்படி 6 மணிக்கு புத்தம் புதுசு, 6.15 க்கு அமுத மொழிகள்,,  6.30க்கு ,ராசிபலன், 6.45க்கு இந்த நாள் இனிய நாள் என்றுதான் இருந்தது. ஆனால் ஓளிபரப்பப்பட்டவை ஆலய வழிபாடு, ஆலயவழிபாடு ராசிபலன் மட்டுமே. சாலமன் பாப்பையா வழங்கும் அமுதமொழிகளும், சுகிசிவம் வழங்கும் இந்த நாள் இனியநாளும் காணாமல் போய்விட்டன. தினசரி திருக்குறள் மற்றும் பழைய இலக்கிய விளக்கங்களையும், இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியையும் ஒளி பரப்பியது ஒரு காலம்

சனி, 20 டிசம்பர், 2014

தொலைக் காட்சித் தொடர்களில் வன்முறைக்கு இடம் தரலாமா?

 

      முந்தானை முடிச்சு தொடரில் பிரேமா  தன் கணவன் பழனியப்பனைத் தன் காதலனைக்  கொண்டுகொல்ல வைக்கிறாள்,. பாசமலர்கள் தொடரில் கள்ள நோட்டுக் கும்பல் பூவரசைக் கொல்ல முயற்சிக் கிறார்கள். நாதஸ்வரம் தொடரில் கதாநாயகன் கோபியைக் கொல்ல முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் வில்லன். ,தெய்வமகள் தொடரில் கதாநாயகன் பிரகாஷைக் கொல்ல நடைபெற்ற முயற்சியில்
உயிர்பிழைத்து வந்திருக்கிறான். வம்சம் தொடரில் பொன்னுரங்கத்தின் அப்பா குண்டடிபட்டு சாகக்கிடந்து உயிர்பிழைத்தவர் ஐசியூவிலிருந்து இன்னும்வெளியேகூட வரவில்லை. தென்றலில் கதாநாயகன் தமிழைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று வில்லன் சொல்லிக் கொண்டிருக்கிறான், வாணி ராணியில் கதிரின் தம்பியைக் கொலை செய்த சேகர் இப்போது கதிரையும் பூஜாவின் கணவனையும் கொல்ல தன் ஆட்களுக்கு ஆணையிட்டிருக்கிறான். சக்தி தொடரில் டாக்டரைக் கொலை செய்ய வைத்த ஆரியா ஜீவாவையும் கொல்ல தன் ஆட்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். அழகி சீரியலில் மட்டும் இப்போதைக்கு கொலைக் காட்சி இடம் பெறவில்லை. (கதாநாயகன் நடராஜ் வில்லனுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டுக்க்குப் போவதால் அவனையும் கொல்ல முயற்சிப்பாரோ!!?! )

சனி, 15 நவம்பர், 2014

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?













சன் தொலைக் காட்சியின் அமுத மொழிகள் நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா அவர்கள் கம்பன் கவிதைகள், விவேக சிந்தாமணி அறப்பளீஸ்வரர் சதகம் பாடல்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதற்கு அருமையாகவிளக்கம் சொல்லி வந்தார். அதேபோல இந்த நாள் இனிய நாள் பகுதியில் சுகிசிவம் அவர்களும் அரிய தகவல்களைக் கூறிவந்தார். இந்நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பிய பகுதிகளையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறார்கள்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஓட்டுனர்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள்



நமது தயரத்தைப் பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருந்தால் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கிறது. அதுவும் அவர் பெண்ணாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
n கவிஞர் கண்ணதாசன்







n சிறு குறிப்புகள்
n  யோசியுங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்
n  எதையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள், இப்போதே செய்யுங்கள்.
n  அழுகிற குழந்தை தான் பால் குடிக்கும் என்பதை மறவாதீர்கள். – கேட்டால்தான் கிடைக்கும்
n  எதிர்காலம் என்பது இப்பொழுதே!
n  நன்னம்பிக்கையே பலன் தரும்.  


விநாயகரிடம் கற்க வேண்டியவை;--
கணபதியின் பெரிய காதுகள் புதிய கருத்துக்களையும், நல்ல ஆலோசனைகளையும்  பொறுமையாக்க் கேட்கத் தூண்டுகின்றன. குவிந்த கண்கள் கைமேலுள்ள வேலைகளை நன்கும் சீக்கிரமாகவும் முடிக்கத் தேவையான நுண்கவனத்தையும் நீண்ட மூக்கு நம்மைச் சுற்றிலுமுள்ளவற்றைப் பற்றி அதிகமாகக் கற்றுக் கொள்ள ஆர்வத்தோடு தேடவும், சிறியவாய் அதிகமாகக்கேட்டு குறைவாகப் பேசவேண்டும் என்பதையும் நமக்கு நன்கு சொல்லித் தருகின்றன. அவரது பெரிய தலை பெரிதாக எண்ணவும் லாபகரமாக யோசிக்கவும் நமக்கு சொல்லித் தருகின்றன.
  


ஒரு ஓட்டுனரிடம் நிச்சயமாக இருக்க வேண்டிய  குணங்கள் ;--
n  போட்டி பொறாமை இல்லாதிருக்க வேண்டும்
n  மனதிலை பாதிக்கப் படாமல் நல்ல மனநிலையோடு இருக்க வேண்டும்
n  (கவர்ச்சி) போஸ்தர்களில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும்
n  சரியான அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.
n  சரியான மற்றும் உடனடி முடிவு எடுக்க வேண்டும்
n  போதைப் பழக்கம் இல்லாதிருக்க வேண்டும்
n  விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்  

சாலை விபத்துக்களைத் தடுக்க சில வழிகள்.;--
1.    நன்கு சோதித்து உரிமம் வழங்க வேண்டும்.
2.    தகுதிச் சான்றிதழ் (Fitness certificate)  உள்ள வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப் படவேண்டும்
3.    ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
4.    எல்லோரிடமும் (மாணவ பருவத்திலிருந்தே) சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம்.
5.    சாலையின் தன்மை மற்றும் குறைபாடுகள் பற்றி நன்கு அறிந்து விபத்துத் தடுப்பு நடவடிக்கை எடுத்தல் அவசியம்..  


சமூக நலனில் அக்கரை உள்ள விளம்பரதாரர்

தொதொலைக்காடசி   விமர்சனம்







சன்தொலைக் காட்சியில் இதுவரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘பிள்ளை நிலா’ தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.. கதையே இல்லாமல் கோகிலா, கோகிலாவின் மகள் நிலா, புதிதாகப் பிறந்த குழந்தை என எல்லோரையும் நீலவேணி பலமுறை கொலை செய்ய முயற்சிப்பதையும் அவர்கள் நிலாவின் முயற்சியால் அவற்றிலிருந்து தப்பிப்பதையும் காண்பித்து, தொடரை நீட்டித்துக் கொண்டே இருந்தவர்கள் அவர்களே மனம் மாறி தொடரை முடித்தது எல்லோருக்கும் நிம்மதியைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

முடியாதது என்று ஏதும் இல்லை

முடியாதது என்று ஏதும் இல்லை
(Nothing is impossible)
கீழே போகமுடியவில்லையென்றால், மேலே செல்லுங்கள்
உள்ளே புகுந்து செல்லமுடியவில்லையென்றால், சுற்றிக்கொண்டு செல்லுங்கள்
வலதுபுறம் போகமுடியவில்லையென்றால், இடதுபுறம் செல்லுங்கள்,
L வடிவ இரும்பு கிடைக்கவில்லையென்றால், L வடிவம் செய்யுங்கள்,

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள்



சன் தொலைக் காட்சியில் இந்தநாள் இனியநாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள் பற்றி விளக்கமாகக் கூறினார்.  அவர்களிடம் இல்லாத குணங்களாக கீழே உள்ளவற்றைக் குறிப்பிட்டார்..
1.      இறந்தகாலத்தில் அவர்கள் உழல்வதில்லை
2.      சௌகர்யங்களில் அவர்கள் நீடிக்க விரும்புவதில்லை