புதன், 14 மார்ச், 2018

வணக்கம் தமிழா தமிழர்களுக்கான நிகழ்ச்சிதானே!

வணக்கம் தமிழா தமிழர்களுக்கான நிகழ்ச்சிதானே!




சன் தொலைக்காட்சியின் தெய்வமகள் நெடுந்தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது - (முடித்து வைக்கப்பட்டது) தொடர் முடிவுற்றதை அத்தொடரின் இறுதிப் பகுதியில் கடைசி ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கொண்டாடி இருக்கலாம். அல்லது ஒரு அரை மணி நிகழ்ச்சியாகக் காண்பித்திருக்கலாம். தெய்வமகள் கொண்டாட்டம் என்று ஒரு மணிநேர நிகழ்ச்சியாக மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பி போரடித்து விட்டார்கள்.
விகடனுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் 2;00 மணிக்கு ஒரு மணி நேர ஸ்லாட் இருக்கிறது என்பதற்காக அந்த நேரத்தில் இதை ஒளிபரப்ப பயன்படுத்திக் கொண்டார்கள் போலிருக்கிறது. அந்த தேரத்திற்கான ‘’வாங்க பேசலாம்’’. வருமா வராதா என்ற சந்தேகத்தை உருவாக்கி விட்டார்கள்.

சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை காலை 8;00 மணிக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். சிறந்த மருத்துவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த ஓவியர், என்று பலதுறைகளில் சிறந்து விளங்குபவர்களை பேட்டி கண்டு அவர்களை ஊக்குவிப்பதுடன் ரசிகர்களுக்கு பல தகவல்களையும் கிடைக்கச் செய்த விருந்தினர் பக்கத்தையும் பலருக்கும் பயன்தரும் நாட்டு மருத்துவத்தை பிச்சுப் பிச்சுப் போட்டு நல்லதொரு மருத்துவ நிகழ்ச்சியையும்  கிட்டத்தட்ட ஒழித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். நேரடி ஒளிபரப்பிற்காக காலை 8;00 மணிக்கே நிலயத்திற்கு வருவது சிரமமாக இருப்பதால் அந்த நேரத்திற்கு விருந்தினர்களைப் பிடிக்க கஷ்டமாக இருப்பதால் கிடைப்பவர்களைக் கொண்டு நிகழ்ச்சியை காமா சோமா என்று நடத்தவேண்டி இருந்தால் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அந்த ஒரு பகுதியை மட்டும் சில நாட்களில் பதிவு செய்து ஒளிபரப்புவதில் தவறு இருக்காதே! இதை நிகழ்ச்சி தயார்ப்பாளர்கள் யோசிப்பார்களா?


'வணக்கம் தமிழா'' என்ற காலை நேரடி ஒளிபரப்ப துவக்கப்பட்டு  சில வாரங்களாக ஒளிபரப்பப் பட்டு வருகிறது.  இதில் வருகின்ற தொகுப்பாளினிகள் அணிகின்ற உடைகள் தமிழர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற உடைகளாக இல்லாமல் முழங்காலுக்கு கீழ் முழுதும் கால்கள் தெரிகின்ற உடைகளை அணிவது ஏன்? இதில் கலந்து கொள்ள வந்த நடிகை அம்பிகா, கஸ்தூரி , காயத்ரி போன்றவர்கள் கூட இது போன்ற உடைகளை அணிந்து வரவில்லையே. அவர்கள் சுடிதாரிலோ அல்லது சேலை கட்டியோ தானே வந்தார்கள்.
மகளிர் தினத்தன்று அந்த தொகுப்பாளினிகளேகூட கால்களை மறைக்கும் உடைதானே அணிந்து வந்தார்கள் மறுநாளும் ஒரு பெண்மணி அப்படிதானே வந்தார் இந்த நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடை தேவைதானா!?

நம்ம ஊர் கலர்
கலர் தமிழ் (நம்ம ஊர் கலர்) என்ற புதிய சேனல் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கப்பட்டது,
நாதஸ்வர இசையுடன் குத்துவிளக்கேற்றி துவங்குவதுதான் தமிழ் மரபு என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமோ! வாத்திய இசையுடன் தொடங்கி பரத நாட்டிய நிகழ்ச்சி தொடர்ந்தது. மூன்றாவதாக நாதஸ்வர இசையுடன் தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளான கரகம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை என பலவற்றையும் காண்பித்தார்கள்
நல்ல குதூகல ஆரம்பம்தான். நிகழ்ச்சிகள் எப்படி புதுமைகளைக் கொண்டு வருகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்

5 கருத்துகள்:

  1. இதை தான் நாகரீகம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போல... கொடுமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் இதையே நவநாகரீகம் என்றுதான் நினைக்கிறார்கள். இது கொடுமையிலும் கொடுமைதான்
      உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  2. ஓ இவ்ளோ விசயம் ஓடிக்கொண்டிருக்கிறதோ.. பொறுமையாக அனைத்தையும் எழுதியிருக்கிறீங்க. நலம்தானே?...

    சில நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சியை விட, அவர்களின் நடத்தை, உடைகள்தான் மனதுக்கு அதிக தாக்கத்தைக் குடுத்து விடுகிறது... என செய்வது சிலதைக் கவனிக்காமல் நமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டி இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நிகழ்ச்சியில் இருக்கும் நிறை குறைகளை உரியவர்களுக்கு தெரிவித்தால் அதை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்குமல்லவா? அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்களா என்பதும் சந்தேகம்தான். ஊதுகிற சங்கு கதைதான் இதுவும்
      உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  3. முற்றிலும் வணிகமயமாகிவிட்ட டி.வி சேனல். இப்படிதான் அவர்களால் செயல்படமுடியும் போல் தெரிகிறது. பேசிப்பயனில்லை.

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.