ஞாயிறு, 15 மார்ச், 2015

மாற்றம் வேண்டும் என்பதற்காகவே நல்லனவற்றைக் கூட மாற்றுவதா?


 ஞாயிறன்று காலை

சன் டீவியின் நிகழ்ச்சி நிரல்படி 6 மணிக்கு புத்தம் புதுசு, 6.15 க்கு அமுத மொழிகள்,,  6.30க்கு ,ராசிபலன், 6.45க்கு இந்த நாள் இனிய நாள் என்றுதான் இருந்தது. ஆனால் ஓளிபரப்பப்பட்டவை ஆலய வழிபாடு, ஆலயவழிபாடு ராசிபலன் மட்டுமே. சாலமன் பாப்பையா வழங்கும் அமுதமொழிகளும், சுகிசிவம் வழங்கும் இந்த நாள் இனியநாளும் காணாமல் போய்விட்டன. தினசரி திருக்குறள் மற்றும் பழைய இலக்கிய விளக்கங்களையும், இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியையும் ஒளி பரப்பியது ஒரு காலம்
அது படிப்படியாகக் குறைந்து வாரம் இரண்டு நாட்கள் மட்டும். ஒரு நாள் மட்டும் என்று மாறி இப்போது நிறுத்தப்பட்டு விட்டது மாறாமல் இருப்பது மாற்றம் ஒன்றுதான் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டும் நிகழ்ச்சிகளாக உள்ளவற்றை நிறுத்தலாமா?’ . சன் தொலைக் காட்சியினர் இது பற்றி மறு பரிசீலனை செய்வார்களா?   மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பு தரமாட்டோம் நாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்ற முடிவோடு இருந்தால் சன் டீவி பார்ப்பவர்கள் தந்தி, புதிய தளைமுறை போன்ற டீவிக்களுக்கு மாறிப் போய்விடுவார்கள் என்ற நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சன்குழுமத்தலைவருக்கு சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கிறது என்றோ என்னவோ இப்போதெல்லாம் ஆலய வழிபாடு ஆலய தரிசனம் போன்ற நிகழ்ச்சிகளையே இடம்பெறச்செய்கிறார்கள்.! சப்த நிமிடங்களும் போன இடம் தெரியவில்லை.   

ஞாயிறு காலை ஆறு மணிக்கு துவங்கிய கந்த சஸ்டி கவசம் முழுமையாக ஓளிபரப்பப்படாமல் நிறுத்தப்பட்டது. மழுமையாக ஒளிபரப்ப முடிந்தால் ஒளிபரப்ப வேண்டும் இல்லையென்றால்  இதனை ஒளிபரப்பாமல் இருக்கலாமே!  

திங்கள் முதல் சனி வரை சூரிய வணக்கம் நிகழ்ச்சி இடம் பெறும் என்று சொன்னார்கள். அதுவும் இப்போது சனிக்கிழமைகளில்  விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு இடம் தரப்பட்டு சூரியவணக்கம் வெள்ளிக்கிழமை யோடு நிறுத்தப் பட்டு விட்டது. 


வெள்ளிக்கிழமையன்று விருந்தினர் பக்கத்தில் கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனை பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜாவும் பாரதி பாஸ்கரும் பேட்டி எடுத்திருந்தது வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தது. 

4 கருத்துகள்:

  1. அவர்களுக்கு இனிய நாளாக இருப்பதில்லையோ என்னவோ...! ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாக சொன்னீர்கள். மற்றவர்களுக்காவது நல்ல நாளாக இருக்க நல்ல நிகழ்ச்சிகள் மூலம் உதவலாமே!
      நன்றி.

      நீக்கு
  2. மற்றவர்களுக்காவது இனிய நாளாக அமையட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான்.
      தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.