உயிர்பிழைத்து வந்திருக்கிறான். வம்சம் தொடரில்
பொன்னுரங்கத்தின் அப்பா குண்டடிபட்டு சாகக்கிடந்து உயிர்பிழைத்தவர்
ஐசியூவிலிருந்து இன்னும்வெளியேகூட வரவில்லை. தென்றலில் கதாநாயகன் தமிழைக்
கொல்லாமல் விடமாட்டேன் என்று வில்லன் சொல்லிக் கொண்டிருக்கிறான், வாணி ராணியில்
கதிரின் தம்பியைக் கொலை செய்த சேகர் இப்போது கதிரையும் பூஜாவின் கணவனையும் கொல்ல
தன் ஆட்களுக்கு ஆணையிட்டிருக்கிறான். சக்தி தொடரில் டாக்டரைக் கொலை செய்ய வைத்த
ஆரியா ஜீவாவையும் கொல்ல தன் ஆட்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். அழகி
சீரியலில் மட்டும் இப்போதைக்கு கொலைக் காட்சி இடம் பெறவில்லை. (கதாநாயகன் நடராஜ்
வில்லனுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டுக்க்குப் போவதால் அவனையும் கொல்ல
முயற்சிப்பாரோ!!?! )
பகலில் வரும் தொடர்களிலும் இதற்கு குறைவில்லை என்றே
தோன்றுகிறது. வள்ளியில் கதாநாயகனை கார் ஏற்றி கொல்ல முயன்றது, கல்யாணப் பரிசில். .மோட்டார்
சைக்கிள் விபத்தில் இறந்ததையும் தன் கணவன்தான் கொன்றான் என்று கௌரி போலிஸ்
நிலையத்தில் சாட்சி சொன்னது, மரகதவீணையில் கார் விபத்தில் அடிபட்டு
ஐசியூவிலிருக்கும் மாதவனைக் கொல்ல திரும்பத்திரும்ப முயற்சிப்\பது (கார்விபத்தும் கொலை முயற்சிதான் என்பது
இன்னும் சுவாரஸ்யமானது), பொன்னூஞ்சல் தொடரில் நந்தினியையும் அவளது கணவனையும்
போலிஸ் இன்ஸ்பெக்டர் கார் ஏற்றி கொல்ல முயன்றது, தாமரை தொடரில் கதாநாயகியின் தந்தை
கொலை செய்துவிட்டு ஜெயிலில் இருப்பது, சமீபத்தில் தொடங்கிய சந்திரலேகா தொடரில்
சந்திராவைக் கொலை செய்ய ஆட்களை அனுப்புவது என்று கிட்டதட்ட எல்லா தொடர்களிலும்
கொலையைப் புகுத்துவது பார்ப்பவர்கள் மனதில் வன்முறையை விதைப்பதாகதா? கதையை நீட்டிப்பதற்கும், சுவை கூட்டுவதற்கும்
கொலை செய்வதாக அல்லது கொலை செய்ய திட்டமிடுவதாக கதையை அமைப்பது ஒன்றுதான் வழியா?
தொடர் தயாரிப்பாளர்களும் சன் தொலைக்காட்சியினரும் இதுபற்றி சிறிதாவது
யோசிப்பார்களா?
பொதுவாக முகப்புப் பாடலில் தொடரில் வரும் கதாநாயகியையும் மற்றவர்களையும்
காண்பிப்பதுதானே வழக்கம்.. சந்திரகலா தொடரில் முகப்புப் பாடல் காட்சியில்
முழுவதும் சந்திராவையும் சந்திராவின் அப்பா அம்மாவை மட்டுமே காண்பிக் கிறார்களே!
காலை 6 மணிக்கு மார்கழி மகா உற்சவமாக பிரபல கர்நாடக இசைக்
கலைஞர்களின் இசை நிகழ்ச்சியை ஒளிபரப்புவது வரவேற்கத்தக்கதே. இடம்பெறும் இசைக்
கலைஞர்கள் எல்லோரையும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க இயலாதே.
பாடுபவர்களின் பெயர்களுயும் மற்ற கலைஞர்களின் பெயர்களையும் நிகழ்ச்சியின்
ஆரம்பத்திலும் கடைசியிலும் காண்பிக்கலாமே.
அமுதமொழிகளையும் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியையும்
புதிதாகத் தயாரிக்க வேண்டாமென்று முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ. இப்போதெல்லாம் இவற்றை
மறுஒளிபரப்பு நிகழ்ச்சி களாகவே மாற்றிவிட்டார்கள். இதைப்பற்றி நான் திரும்பத்
திரும்ப எழுதினால் சன் தொலைக்காட்சியின் மறுஒளிபரப்புப் போல நானும் ஏற்கனவே
எழுதியவற்றையே திரும்ப எழுதுவது போல ஆகிவிடும் என்பதால் இவற்றைப் பற்றி இனி
எழுதக்கூடாது என முடிவு செய்து விட்டேன்.
நன்றி நண்பரே
பதிலளிநீக்குUngal varugaikkum karuththup padhivirkkum nandri
பதிலளிநீக்குஹா...ஹா..ஹா... நல்ல முடிவு உங்கள் முடிவு.. இதைவிட இத்தொடர்களை இனிப் பார்ப்பதில்லை என, விரைவில் முடிவெடுக்க என் வாழ்த்துக்கள்:).
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்குசாரி நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். -- இனி இதுபற்றி எழுதப் போவதில்லை என்ற முடிவு அமுதமொழி மற்றும் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சி களுக்கு மட்டுமே. மற்ற விமர்சனங்களுக்கு இல்லை.