இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக
மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன..ஆனால் அது போன்ற தொடர்கள் சன் தொலைக் காட்சியில் இதுவரை ஒளிபரப்பப்படாமல் இருந்தது.
நேரடியாக தமிழில் தயாரிக்கப் பட்ட தொடர்கள் மட்டுமே இடம் பெற்று வந்தன. சமீப காலமாக அதுபோன்ற தொடர்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளது. இது சன் தொலைக் காட்சியின் ரசிகர்களை பெரிதும் கஷ்டப்படுத்துவதாக உள்ளது.
முதலில் ஜெய் அனுமான் தொடர் மொழிமாற்றுத் தொடராக இடம் பெற்றது.
அது போதாதென்று இப்போது நாகினி என்ற ஒரு தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது. இது யார் தயாரிப்பு யார் இயக்குவது என்ற விவரங்கள் கூட இடம் பெறுவதில்லை.இதை சன் தொலைக்காட்சி ரசிகர்கள் பார்ப்பார்களா என்பது சந்தேகமே. முன்பு மாலையில் ஆரம்பித்தால் இரவு 11.00 மணி வரை எல்லா தொடர்களையும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஈ.எம். ஐ தொடர் போரடிக்கத் தொடங்கியதால் 10.30 வரை பார்க்கத் தொடங்கினார்கள் . இப்போதோ 10.00 மணிக்கே வேறு சேனல்களுக்கு மாறி விடுகிறார்கள்.
இந்திய ( சன்) தொலைhqக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக நாகினியை மறு ஒளிபர்ப்புச் செய்து ''மறு ஒளிபரப்பை''யும் துவக்கி வைத்துவிட்டீர்கள். இது வரை மற்ற சேனல்களில் பல நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் சன் தொலைக்காட்சியில் மட்டும் தான் அப்பொழுதே மறு ஓளிபரப்பு செய்யப் படுவதில்லை என்ற நிலை இருந்து வந்த்து . அந்த நற்பெயரையும் கெடுத்துக் கொண்டு விட்டீர்கள். நாகினியில் ஒன்றுமே புரியாத தால் அதைப் புரிந்து கொள்வதற்காக அத்தொடரை மறு ஒளிபரப்பு செய்கிறீர்களா என்றும்தெரியவில்லை..
உங்கள் ரசிகர்கள் உங்களைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்களே காரணமாக ஆகி இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.