புதன், 14 மார்ச், 2018

வணக்கம் தமிழா தமிழர்களுக்கான நிகழ்ச்சிதானே!

வணக்கம் தமிழா தமிழர்களுக்கான நிகழ்ச்சிதானே!
சன் தொலைக்காட்சியின் தெய்வமகள் நெடுந்தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது - (முடித்து வைக்கப்பட்டது) தொடர் முடிவுற்றதை அத்தொடரின் இறுதிப் பகுதியில் கடைசி ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கொண்டாடி இருக்கலாம். அல்லது ஒரு அரை மணி நிகழ்ச்சியாகக் காண்பித்திருக்கலாம். தெய்வமகள் கொண்டாட்டம் என்று ஒரு மணிநேர நிகழ்ச்சியாக மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பி போரடித்து விட்டார்கள்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக செய்தியையே பலிகொடுப்பதா?

 விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக செய்தியையே பலிகொடுப்பதா?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே சரியான நேரத்தில் ஒளிபரப்பப் படுகின்றனவா என்றால் இல்லை ஒன்று நேரத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்து விடுவார்கள் அல்லது ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் தாமதமாக ஒளிபரப்பாகும்.