சனி, 31 ஆகஸ்ட், 2013

ஆஹா என்ன ருசி!# ‘’தமிழ் சினிமா கிளப்’’ சேனலில் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பும் போது அத்திரைப்படத்தின் பெயரை வலது பக்க மேல் மூலையில் காண்பிக்கிறார்கள். அதனால் எந்த நேரத்தில் அந்தச் சேனலைப் பார்த்தாலும் அபோது என்ன திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.  மற்ற சேனல்களிலும் இது போல ஒளிபரப்பப்படும் திரைப்படத்தின் பெயரைக் காண்பித்தால் பார்ப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்குமே – செய்வார்களா?!


 # சன்தொலைக்காட்சியில் ‘’ஆஹா என்ன ருசி’’ என்ற சமையல் நிகழ்ச்சியை ஒளிபர்ப்பி வருகிறார்கள், அந்நிகழ்ச்சியை செஃப் ஜேக்கப் தயாரித்து வந்தார். அவர் இறந்து சில மாதங்களாகி விட்டன. அவர் இறந்த பிறகும் அந்நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபர்ப்பாகி வருகிறது. ஜேக்கப் சமைக்கும் சில காட்சிகளும் அதில் இடம் பெறுகின்றன. ஒருவர் இறந்த பிறகும் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாவது ஆச்சர்யமாக உள்ளது.(அவ்வளவு காட்சிகள் தயார் செய்து வைத்துள்ளாரா?)

#சிறுவர் சிறுமிகளுக்கான சன் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் சிறுமி ரேணுகா ‘’மல்லிகை முல்லை மலர்ப்பந்தல் பச்சை வாழை தோரணங்கள் எல்லாம் எதுக்காக?’’’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்.உடனே கங்கை அமரன் அனுராதா ரமணன் புஷ்பவனம் குப்புசாமி மூவரும் அந்தப் பெண்ணின் அருகே சென்று பாடலை நிறுத்தச் சொல்லி சரியா இல்லையே உனக்கு ‘’கம்ஃபர்டபிலா இருக்கா?’ ’என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்ப பாடவேண்டிய பாடலே வேறே ஹேப்பி பர்த்டே இல்லே பாடணும் என்று சொல்லி கேக் வெட்டி பாடிய சிறுமிக்கு பர்த் டே கொண்டாடினார்கள். அதை முடித்து அப்பாடலைப் பாடச் சொன்னார்கள்.  பாட்டைப் பாடியதில் குறை ஏதுமில்லாமல் பாடலை இடைமறித்து இப்படி பயமுறுத்தி பர்த் டே கொண்டாட வேண்டுமா?  அச்சிறுமி பாட வந்ததுமே பிறந்த நாள் கொண்டாடிவிட்டு பிறகு பாடச் சொல்லி இருக்கலாமே!  இந்த நாடகம் அந்த மேடையில். தேவைதானா?

Live Telecast of second World Bloggers Meetஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

புதிய அமுத மொழிகள் ஒளிபரப்ப மாட்டார்களா?

#தினந்தோறும் திருக்குறள் விளக்கம் வழங்கிக் கொண்டிருந்த சாலமன் பாப்பையா அவர்களின் அமுதமொழிகள் நிகழ்ச்சியை ஞாயிறு காலை மட்டும்தான் கேட்கமுடியும் என்ற நிலையை உண்டாக்கிவிட்டார்கள்- சரி அன்றாவது பழைய இலக்கியங்களை கேட்கலாமே என்று தொடர்ந்து அந்நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்றால் ஒளிபரப்பிய அதே பகுதியை திரும்பத் திரும்ப ஒளிபர்ப்பிக்கொண்டிருக்கிறார்கள்
நாய்வாலை அளந்து நறுக்கி தீட்டினாலும எழுத்தாணியாக ஆகாது,. சுடுகாட்டை பெருக்கி விளக்கேற்றினாலும் வீடாகாது. அது போல தாய் பேச்சைக் கேட்காத சண்டியன் கஞ்சனாக ஈவாரை ஈயஒட்டான், தானும் தரமாட்டான். என்ற விவேக சிந்தாமணியின் கருத்துக்களையும் இதே போல பல ஓளிபர்ப்பிய பகுதிகளையும் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது நியாயமா? இவர்களைக் கேட்க யாருமே இல்லை என்ற தைரியத்தில்தானே இப்படி செய்கிறார்கள்.

#கார்த்திகைப் பெண்கள் தொடர் முடிந்தது. கதையின் முடிவில் வழக்கம் போல வில்லன் திருந்துவதாகக் காட்டினார்கள். (வில்லன் ஜெயிலுக்கும் போய் ஜெயிலில் இருந்தபோது திருந்தினார் என்று சொன்னால்கூட பராவாயில்லை) வில்லனின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டான் என்ற காரணத்திற்காக அவனை கொன்றுவிட்டதற்காக வருந்தி அவனது பெற்றோரை ஜெயிலுக்கு வரவழைத்து அவர்களிடம் தன் மகள் ஆர்த்தியை மகளாக அவர்களிடம் ஒப்படைப்பதும் தன் ரைஸ் மில்லை அவர்களுக்கு எழுதி வைப்பதும் நம்பும்படியாக இல்லையே.,

# ஸ்நிக்கர்ஸ் விளம்பர்த்தில் இப்போது 100% வெஜிடேரியன் என்று போடுகிறார்களே அப்படியென்றால் இதுவரை மழுவதும் வெஜிடேரியன் இல்லையா? அப்படியென்றால் அதை அறிவிக்காதது ஏன்?

# ‘’பாலுசாமி என்னை பொடியன்னு கூப்பிடறான்’’ என்று சொல்லும் சிறுவனுக்கு ‘’ஒரு காதில வாங்கி இன்னொரு காதிலே விட்டுறு’’ என்று டாக்டர் ஆலோசனை சொல்வதும் அதற்கு சிறுவன் ‘’கஷ்டம் ஏன்னா நான் இரண்டு காதிலேயும் கேட்கிறேனே!’’ என்று சொல்வதும் சுவையான விளம்பரம். ஆனால் இப்பொழுது அப்பகுதியை மட்டும் வெட்டிவிட்டு ஒளிபரப்புகிறார்களே! விளம்பர நேரத்தைக் குறைக்க இப்படி செய்தார்களோ?

# சன் டீவியிலும் ஒளிபரப்பிய அதே சில படங்களை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒளிபரப்ப வேறு படங்களே கிடைக்கவில்லையா இவர்களுக்கு? இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இப்படம் நூறாவது முறையாக ஒளிபரப்பப்படுகிறது என்று அறிவிப்பார்களோ!

சனி, 17 ஆகஸ்ட், 2013

பிச்சை புகினும் கற்கை நன்றே


நன்றி:-  எங்கள் பிளாகின் பாசிடிவ் செய்திகள் - கடந்தவாரம்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013