சனி, 20 டிசம்பர், 2014

தொலைக் காட்சித் தொடர்களில் வன்முறைக்கு இடம் தரலாமா?

 

      முந்தானை முடிச்சு தொடரில் பிரேமா  தன் கணவன் பழனியப்பனைத் தன் காதலனைக்  கொண்டுகொல்ல வைக்கிறாள்,. பாசமலர்கள் தொடரில் கள்ள நோட்டுக் கும்பல் பூவரசைக் கொல்ல முயற்சிக் கிறார்கள். நாதஸ்வரம் தொடரில் கதாநாயகன் கோபியைக் கொல்ல முயற்சி செய்து கொண்டே இருக்கிறான் வில்லன். ,தெய்வமகள் தொடரில் கதாநாயகன் பிரகாஷைக் கொல்ல நடைபெற்ற முயற்சியில்
உயிர்பிழைத்து வந்திருக்கிறான். வம்சம் தொடரில் பொன்னுரங்கத்தின் அப்பா குண்டடிபட்டு சாகக்கிடந்து உயிர்பிழைத்தவர் ஐசியூவிலிருந்து இன்னும்வெளியேகூட வரவில்லை. தென்றலில் கதாநாயகன் தமிழைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று வில்லன் சொல்லிக் கொண்டிருக்கிறான், வாணி ராணியில் கதிரின் தம்பியைக் கொலை செய்த சேகர் இப்போது கதிரையும் பூஜாவின் கணவனையும் கொல்ல தன் ஆட்களுக்கு ஆணையிட்டிருக்கிறான். சக்தி தொடரில் டாக்டரைக் கொலை செய்ய வைத்த ஆரியா ஜீவாவையும் கொல்ல தன் ஆட்கள் மூலமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். அழகி சீரியலில் மட்டும் இப்போதைக்கு கொலைக் காட்சி இடம் பெறவில்லை. (கதாநாயகன் நடராஜ் வில்லனுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டுக்க்குப் போவதால் அவனையும் கொல்ல முயற்சிப்பாரோ!!?! )