ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள்



சன் தொலைக் காட்சியில் இந்தநாள் இனியநாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள் பற்றி விளக்கமாகக் கூறினார்.  அவர்களிடம் இல்லாத குணங்களாக கீழே உள்ளவற்றைக் குறிப்பிட்டார்..
1.      இறந்தகாலத்தில் அவர்கள் உழல்வதில்லை
2.      சௌகர்யங்களில் அவர்கள் நீடிக்க விரும்புவதில்லை
.
3.      தங்களுக்கான முடிவுகளை மற்றவர்கள் எடுக்க அனுமதிப்பது இல்லை,
4.      மற்றவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை
5.      மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப் படுவதில்லை
6.      சுய இரக்கம் கொள்வதில்லை
7.      மற்றவர்களின் உதவிகளைவேண்டாமென ஒதுக்குவதில்லை.
8.      மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை
9.      பொறுமையற்று இருப்பதில்லை
10.  எதையும் தவறாகப் புரிந்துகொள்வதில்லை.
இந்த பத்து குணங்களை பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லதுதானே!


சன் தொலைக் காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரைதான் ‘சூரிய வணக்கம்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.  ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் ‘இந்தநாள் இனிய நாள்’’ பகுதியில் ‘சூரிய வணக்கம்’’ என்று காண்பிக்கிறார்களே! அது எப்படி?



புது யுகம் தொலைக் காட்சியில் நட்சத்திர ஜன்னல் பகுதியில் நடிகை சங்கீதா குஷ்புவிடம் பல வித்தியாசமான புதுப் புது கேள்விகளைக் கேட்டு நிகழ்ச்சிக்கு சுவைகூட்டினார். என்னதான் சுவையான நிகழ்ச்சி என்றாலும் இந்த பேட்டிதான் ஏற்கனவே ஒளிபரப்பான நிகழ்ச்சி ஆயிற்றே! 

 இதுஒரு மறு ஒளிபரப்பு என்று காண்பித்திருக்கலாமே! அதை ஒரு புது நிகழ்ச்சி போல எந்த அறிவிப்பும் இல்லாமல் காண்பிப்பது நியாயமா? (புதிதாக துவங்கியுள்ள சேனலில் இப்போதே மறு ஒளிபரப்புகள் செய்யத் துவங்கிவிட்டார்களா?)

7 கருத்துகள்:

  1. மனதில் பலமிக்கவர்களிடம் இல்லாத பத்து குணங்கள் பற்றி விளக்கம் பயனுள்ளது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி, தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  2. பயனுள்ள பகிர்வு இது. பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி

      நீக்கு
  3. இருக்கக் கூடாத பத்து குணங்கள் பற்றி அறிந்தேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவைப் படித்து தங்கள் மேலான கருத்தைப் பதிவு செய்துள்ளமைக்கு நன்றி

      நீக்கு
  4. 'தம' வாக்களித்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.