ஞாயிறு, 22 நவம்பர், 2015

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே சேனலில் நூறாவது முறையாக

தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறைப்பயாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படம் ஓளிபரப்பாகும் என்று சொல்லிவந்தது போக இப்போது ‘’ தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறைப்பயாக திரைக்கு வந்து சில வாரங்களே ஆன திரைப்படம் ஓளிபரப்பாகும்’’ என்று விளம்பரம் செய்யும் நிலை வந்துள்ளது
அடுத்து சில நாட்களே ஆன என்றோ நேற்று திரைக்கு வந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என்றோ கூட விளம்பரம் செய்யும் நிலைகூட வரலாம் என்றே தோன்றுகிறது.
இப்போது சன் தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பப்பட்ட திரைப் படங்கள் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப பலமுறை ஒளிபர்ப்பப்பட்டு வருகின்றனஇதற்கு உதாரணமாக எந்திரன்,, அந்நியன், பேராண்மை அரண்மனை போன்ற பல திரைப்படங்களைச் சொல்லலாம்.. இந்த திரைப்படங்களுக்காக விளம்பரம் செய்யும் போது ‘;இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே சேனலில் நூறாவது முறையாக இத்திரைப்படம் ஓளிபரப்பாகிறது’’ என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம்.   என்று அறிவித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லைஒரே படத்தை திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதால் பார்ப்பவர்களுக்கு போரடிக்குமே என்று கூட தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா??
ஆண்டுக்கு 75 அல்லது 80 படங்கள் என்று வெளிவந்தது போக ஒரு ஆண்டில் வெளிபரப்பாகும் படங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது.   ந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளி வந்த போதும் கூட ஒவ்வொரு வாரமும் ஒளிபர்ப்பான பழைய படங்களையே திரும்பத் திரும்பத் திரும்ப ஒளிபர்ப்பிக் கொண்டே இருக்கிறார்கள்இதை மாற்ற வழியே இல்லையா?
மற்ற மொழித் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு பல சேனல்கள் இருந்த போதிலும் எது நல்ல திரைப்படம் அது எப்போது ஒளிபரப்பாகிறது என்ற விவரங்கள் பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மொழியில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படமாக தேர்ந்தெடுத்து தமிழ் சப்டைட்டிலோடு ஒளிபரப்பினால் அவற்றிற்கு அதிக அளவில்  வரவேற்பு  இருக்குமே! ஒரு வாரம் தெலுங்கு, அடுத்த வாரம் கன்னடம், அதற்கு அடுத்த வாரம் மலையாளம், அதற்கு அடுத்தது இந்தி திரைப்படம் என்று மற்ற மொழிப்படங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யலாமே.முன்பெல்லாம் வருடாவருடம் தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் ஒளிபர்ப்புவதற்காகவே சில வித்தியாசமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து  ஒளிபரப்புவது வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆனால் இப்போதோ பெரும்பாலாதின தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக ஏதோ ஒரு சில திரைப்படங்களை சுலபமாக ஒளிபரப்பிவிட்டுப் போய்விடலாமே என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. இந்த நிலையை மாற்றி வெவ்வேறு புதிய நிகழ்ச்சிகளாக தயாரித்து ஒளிபர்ப்ப முயற்சி செய்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முன் வருவார்களா?

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

   நீக்கு
 2. சரியாகாச் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே,

  ஒரு விரல், பொம்மை, அக்கரைப் பச்சை, பிராயச்சித்தம், கலியுகக் கண்ணன், உச்ச கட்டம், சொல்லாதே யாரும் கேட்டால், காற்றுக்கென்ன வேலி, கல்யாண காலம் போன்ற படங்களை நான் டிவி யில் கண்டதேயில்லை. எல்லாமே சிவாஜி எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் சூர்யா என்று தான் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 3. இன்னும் இதுபோன்ற திரைப்படங்கள் பல இருக்கின்றன.அவற்றை ஒளிபரப்பினால் வரவேற்பு அமோகமாக இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.