செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சமூக நலனில் அக்கரை உள்ள விளம்பரதாரர்

தொதொலைக்காடசி   விமர்சனம்







சன்தொலைக் காட்சியில் இதுவரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘பிள்ளை நிலா’ தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.. கதையே இல்லாமல் கோகிலா, கோகிலாவின் மகள் நிலா, புதிதாகப் பிறந்த குழந்தை என எல்லோரையும் நீலவேணி பலமுறை கொலை செய்ய முயற்சிப்பதையும் அவர்கள் நிலாவின் முயற்சியால் அவற்றிலிருந்து தப்பிப்பதையும் காண்பித்து, தொடரை நீட்டித்துக் கொண்டே இருந்தவர்கள் அவர்களே மனம் மாறி தொடரை முடித்தது எல்லோருக்கும் நிம்மதியைத் தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கோமாவில் இருக்கும் கதாநாயகனான ராம்குமாரையே காண்பிக்காமலே வணக்கம் போட்டது ஏன்? இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் முன்பாகவே முடித்திருக்கலாம்!
பலராலும் பார்க்க முடியாத நேரமாகிய மாலை 5.30 மணிக்கு இனி எந்த தொடரும் இடம்பெறாது என்பது ஒரு நல்ல முடிவுதான்.
பிள்ளை நிலா தொடர் சனிக்கிழமையே வணக்கம் போட்டு முடிக்கப் பட்டது என்பது சன் தொலைக்காட்சியில் வேலை செய்பவர்களுக்கே தெரியாமல் இருப்பதுதான் வேடிக்கை. திங்கட்கிழமை (15-9-2014 அன்று) பெரிய குடும்பம் திரைப்படம் முடிந்ததும் 5.30 மணிக்கு ‘’பிள்ளை நிலா’’ ஒளிபரப்பாகும் என்று சன் டி.டி.எச்.சில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கே இந்த விவரம் தெரியாமல் அதைத் திருத்தாமல் இருப்பது ஆச்சர்யாமாக உள்ளது.

சன் தொலைக்காட்சியில் சூரிய வணக்கம் நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இடம் பெறுகிறது. சனிக்கிழமையன்று ஒளிபரப்பாகும் இந்தநாள் இனியநாள் நிகழ்ச்சியை ‘’சூரிய வணக்கத்தின் ஒரு பகுதியாக காண்பிப்பதில் தவறில்லை
ஆனால் சூரிய வணக்கம் இடம்பெறாத ஞாயிற்றுக் கிழமை ‘ இந்த நாள் இனிய நாள் ‘ ஒளிபரப்பாகும போது அதிலும் சூரிய வணக்கம் என்று காட்டுவது தவறில்லையோ? இதெல்லாம் சன் தொலைக் காட்சியினருக்குத் தெரியாதா?       


‘’மழை நீரை வீணாக விடலாமா? மழைநீரை சேகரிப்பீர்’’ என்ற மழைநீர் சேகரிக்கும் அவசியத்தை விளக்கும் விளம்பரத்தை சமூக நலன் கருதி இடம்பெறச் செய்யும் சக்திமசாலா நிறுவனம் பாராட்டுக்குரியது. டீவி பார்ப்பவர்கள் சார்பிலும் மற்ற பொது மக்கள் சார்பிலும் நன்றி, நன்றி, நன்றி. இது போல லட்சக்கணக்கானவர்களின் உயிர்களைப் போக்கும் சாலை விபத்துக்களைத் தவிர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வெளியிட ஏதாவது ஒரு நிறுவனம் முன்வரலாமே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.