வெள்ளி, 18 நவம்பர், 2011

தொலைக்காட்சித் தொடரை நெடுந்தொடராக்க இதுதான் வழியாசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சித் தொடர் மாதவி. அந்தத் தொடரில் கதாநாயகி மாதவியே இறந்துவிட்டதாகக் கதை பின்னினார்கள். பிறகு இரண்டாம் கதாநாயகியான அருணா மலையிலிருந்து விழுந்து விட்டதாகவும் மலையடிவாரத்தில் பல இடங்களில் தேடியும் அவரோ அவரது உடலோ கிடைக்கவில்லை என்று சொல்லி கதையை வளர்த்தார்கள்.

அதேபோல தங்கபாண்டியன் இறந்து போனதாகச்சொல்லி சில நாட்கள் கழித்து அவர் இறக்கவில்லை என்று சொன்னார்கள். திரும்ப அருணாவைக் காணவில்லை என்று சொல்லி அவரது உடல் மருத்துவ மனையில் இருப்பதாகச் சொல்லி அவரது அம்மாவும் அப்பாவும் மருத்துவ மனைக்குச் செல்வதாகக் காண்பித்து பிறகு இறந்தது அருணா இல்லை என்று கதையை திருப்புகிறார்கள். 

?
ஒருவர் இறந்ததாகக்காண்பித்து அது கனவு என்றோ அல்லது அவர் இறக்கவில்லை என்றோ காண்பிப்பதும் சினிமாவுக்கோ தொலைக்காட்சித் தொடருக்கோ புதிது இல்லைதான். ஆனால் ஒரே கதையில்(ஒரே தொடரில்) இப்படி இவ்வளவு பேர் இறந்ததாகக் காண்பித்து பின்னர் அவர்கள் இறfக்கவில்லை என்று காண்பிப்பது எப்படி நியாயமாகும்?

திங்கள், 7 நவம்பர், 2011

சீரியல் தயாரிப்பாளர்கள் வித்தியாசமாக யோசிக்கமாட்டார்களா?


ஒருவருக்கு உடல் நலம் திடீரென மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள், மருத்துவர்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் பெற்று வீட்டுக்குத் திரும்புவார்கள். இது தானே சாதாரணமாக வாழ்வில் நடக்கும். 
ஆனால் இந்த தமிழ் டீவி சீரியல்களில் நடப்பது என்ன?   ஒருவருக்கு உடல் நலன் மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள். அங்குள்ள மருத்துவர்கள் அவம்ரை பரிசோதித்துவிட்டு உடல்நலம் ரொம்ப மோசமாக இருக்கிறது,  இன்னும் 24 மணியோ அல்லது 36 மணியோ ஆனால்தான் சொல்லமுடியும் என்று சொல்வார்கள்.
.
அந்த கெடு முடியும் போது “”ஆபரேஷன் அல்லது ட்ரீட்மெண்ட் நல்லபடியாக முடிந்துவிட்டது. நன்கு குணமாகிவிட்டார்-- ஆனால் அவரிடம் எந்த அதிர்ச்சியான செய்தியையும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவரது உயிருக்கேகூட ஆபத்தாகிவிடலாம்”” என்று ஒருவரை தனியாகக் கூப்பிட்டு டாக்டர் சொல்வார். அதனால் சொல்லவந்த முக்கியமான செய்தியை அவரிடம் சொல்வதை சொல்லாமல் தள்ளிப்போடுவார். அதனால் கதையை இன்னும் சில வாரத்திற்கு இழுக்கலாமே!

‘முந்தானை முடிச்சு’ ‘இதயம்’ போன்ற பல தொடர்களில் இப்படித்தான் திரைக்கதையை அமைத்திருந்தார்கள். இப்போது ‘பெண்டாட்டி தேவை’ தொரிலும் அதேகதைதான்.  இவர்கள் எப்போதுதான் வித்தியாசமாக யோசிக்கப்போகிறார்களோ?