வியாழன், 27 மார்ச், 2014
ஞாயிறு, 16 மார்ச், 2014
தொடர்களுக்காக தலைப்புச் செய்தி நேரம் பாற்றப்படலாமா?
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
வெள்ளி, 7 மார்ச், 2014
உலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு கின்னஸ் முயற்சி
‘’விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்’’
, ‘’ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும்’’
என்ற அறிவிப்புகளோடு ஏதோ ஒரு விதத்தில் புதுமைகளை அவ்வப்போது செய்து வரும் திருபிக்சர்ஸ் இப்போது சன் தொலைக்காட்சி
மூலமாக நாதஸ்வரம் தொடரில் ஒரு நாளைய நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பி ஒரு கின்னஸ்
சாதனை செய்திருப்பது பாராட்டுக்குரியது.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
திங்கள், 3 மார்ச், 2014
ராசி பலனையும் கூட மறுஒளிபரப்புச் செய்வார்களோ?

சன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா
தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக்
கதைகள்’’ வித்தியாசமாக உள்ளன.
‘தெரியாமலே
ஒரு கொலை’ கதையிலும் சஸ்பென்ஸுக்கு குறைவில்லை.
ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள். அப் பெண் எப்படிஉயிரோடு வந்து தன்
காதலனைத் திருமணம் செய்து கொள்கிறாள் என்பதில் தொடங்கி கடைசி காட்சி வரை எத்தனை
எத்தனை திருப்பங்கள்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
திங்கள், 17 பிப்ரவரி, 2014
ஜப்பான் அணுகுண்டு வீச்சில் தப்பித்தவர்
சன்
டி.டீ.எச்சில் (DTH) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி களைப்
பற்றிய விவரங்களை திரையின் கீழ்ப்பகுதியில் தருவார்கள். அதுபோல சன்
தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகப் போகும் நிகழ்ச்சிகளாக “6.20 க்கு இந்த நாள்
இனியநாள் என்றும் 6.30க்கு ராசிபலன்’’” என்றும் காண்பித்தார்கள் ஆனால் 6.20க்கு ஒளிபரப்பான நிகழ்ச்சி
சாலமன் பாப்பையா வழங்கிய ‘”அமுத
மொழிகள்”’’. அவர்களுடைய சொந்த தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையே தவறாகத் தருகிறார்கள் என்றால்
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மேல் இவர்களுக்கு எவ்வளவு அக்கரை இருக்கிறது என்று
புரிந்து கொள்ளலாம்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
எம்.ஆர்.பி. விலைக்குமேல் விற்கலாமா?
“”சன்தொலைக்காட்சியில்
இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த மெகாதொடர்களில் பெரும்பாலனவை
சனிக்கிழமை களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. அதாவது மாலை 6.30 மணிமுதல்
9.00 மணி வரை ஒளிபரப்பப்படும் தொடர்கள் மட்டும்
சனிக்கிழமைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளன. அதனால் இது ரொம்ப நாள் நீடிக்காது.
உடனே சந்தோஷப் படாதீர்கள். சனிக்கிழமைகளில் 9.00 மணிக்கு
மேல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு வேறு நேரங்களை ஒதுக்கிவிட்டு 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படும் தொடர்களையும் நீட்டித்துவிடுவார்கள்
ஏனென்றால் அவற்றில் ராதிகா தொடரும் விகடன் தொடர்களும் உள்ளனவே””.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
பொது,
TV serials
திங்கள், 27 ஜனவரி, 2014
கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்

குடியரசுதின தமிழக அருசுவிழாவினை மழுமையாகக் காண்பித்தது ஜெயா டீவி.
நடனங்கள் நடைபெற்றதைக் காண்பித்த போது (குறிப்பாக கோலாட்டம் பின்னல் நடனத்தின்
போதும் அதற்கு முந்திய ட்ரம் நடனத்தின் போதும்) நடனத்தை விட்டுவிட்டு
பார்வையாளர்களையும் சிலைகளையும் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எது முக்கியம் எது முக்கியமில்லை என்று கூட
தெரியாதா படம்பிடிப்பவர்களுக்கு.
சன் தொலைக்காட்சியின் முத்தாரம் நெடந்தொடரில் நடிகை தேவயானி இரு
வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று இவருக்குப் பதில் இவர் என்று
வேறு ஒருவரை நடிக்க வைத்து விட்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து தீவிபத்தில் அவரது
முகம் சிதைந்து போனது அதனால் அவரது முகத்தை மாற்ற வேண்டும் என்று சொல்லி வேறு
ஒருவரை நடிக்க வைத்தார்கள். இப்பொழுது அந்த நெடுந்தொடரை
நிறுத்தியேவிட்டார்கள். இவர்கள்
நினைத்தால் ஆளை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் இல்லையெனில் கதையையே
மாற்றிக்கொள்ள லாம் போலிருக்கிறது. தொடர் பார்ப்பவர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை
இந்தத்தயாரிப்பாளர்கள்.
‘’மண்டைக்குள் மாவாட்ரீங்க மாவு’’ என்று கோபப்படுகின்ற பெண்ணிடம் ஒரு
பிஸ்கட்டைக் கொடுத்து இதை சாப்பிடு என்று சொல்கிறான் நண்பன். ‘’ஏண்டா?’’ என்று
அவள் கேட்க ‘’பசி வந்திட்டா நீ நீயா இருக்க மாட்டே’’ என்று சொல்கிறான் நண்பன். அதை
சாப்பிட்ட உடன் அந்தப் பெண் ஒரு அமைதியான ஆணாக மாறிவிடுகிறாளாம். இப்படி ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.
பெண்கள் இதைப் பார்த்துக்கொண்டு எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்று
தெரியவில்லை. ஒருவன் பசிவந்துவிட்டால் அவன்
அவனாக இருப்பதில்லை கோபக்காரனாக மாறிவிடுகிறான் என்று காண்பித்து விட்டு போகட்டும். கோபப்படும் ஒரு பெண்ணாக ஏன் காண்பிக்க
வேண்டும். பெண்கள்தான் இப்படி கோபப்படுவார்கள் கோபத்தில் கண்ணாபிண்ணா வென்று
பேசுவார்கள் என்று சொல்கிறார்களா இந்த விளம்ரம் தயாரித்தவர்கள்?
கதாநாயகனை அல்லது கதாநாயகி யையே இறந்து போனதாகக்காட்டி சில நாட்கள்
அல்லது சில வாரங்களுக்குப் பிறகு அவர் உயிரோடு இருக்கிறார் என்று கதையைத் தொடர்வது
பற்றி இதையெல்லாம் யார் நம்புவார்கள் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். இப்பொழுது
அதே பாணியில் வம்சம் தொடரின் கதாயாயகியான ரம்யாகிருஷ்ணன் இறந்து விட்டதாக
கதைக்கிறார்கள். (அவர்தான் இத்தொடரின்
தயாரிப்பாளர்கூட) இதை எப்படி பார்ப்பவர்கள் நம்புவார்கள் என இயக்குனர்
நினைக்கிறார்? பூ சுற்றுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
அழகிய மனைவி குளித்து
லக்ஷ்மிகரமாக காபியை எடுத்துக் கொண்டு கணவனுக்கு தர அவனது அறைக்குச் செல்கிறாள்,
காபியை டீபாயில் வைத்துவிட்டு ஜன்னலைத் திறந்து விடுகிறாள். வெளிச்சம்
கண்ணில்பட்டு கணவன் திரும்பிப் படுத்து தூக்கத்தைத் தொடர்கிறான். செல்ஃபோன் மணி
ஒலிக்கிறது. கணவன் அதை எடுத்துப் பேச, ஃபோனில் அவனது மனைவியின் குறல் ‘’குட்
மார்னிங்’’ என்று ஒலிக்க மகிழ்ச்சியில் திரும்பி மனைவியைப் பார்க்கிறான்.
காலையில் மூன்று மணிநேரம் இலவசமாகப் பேசலாம் என்ற விளம்பரம் ஒரு கவிதைபோல
படமாக்கி உள்ளனர். பாராட்டலாம்.
லேபிள்கள்:
தொடர் விமர்சனம்,
தொலைக் காட்சி,
TV serials
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











