வியாழன், 27 மார்ச், 2014

நல்லவற்றைக் காண்பிப்பது நல்லதுதானே


வம்சம் தொடரில் ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருக்கும் ராஜதுரைக்கு செல்ஃபோனில் அழைப்பு வர, ராஜதுரை வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு செல்ஃபோனில் பேசுவதாகக் காண்பித்த இயக்குனரைப் பாரட்டத்தான் வேண்டும். 


ராஜதுரை ஹெல்மெட் போடாமல் அல்லவா வண்டி ஓட்டுகிறார்.  அவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுவதாகக் காண்பித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே!



நாதஸ்வரம் தொடரில் கத்தியால் குத்தப்பட்ட ராகினியின் முன்னாள் கணவன் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடி ஒளிந்து கொண்டு, அவன் இறந்துவிட்டதாகவும் கத்தியால் குத்திய ராகினியின் சித்தப்பாவை ஜாமீனில் வெளியே விடக்கூடாது என்றும் நாடகமாடுவதெல்லாம் சரிதான்.  மலரின் முன்னாள் கணவன் ஆற்றில் குதித்து காணாமல் போய்விட, (அவன் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டு) அவன் இறந்து போய்விட்டதாக அவனது பெற்றோர் நாடகமாடியதும் இதே தொடரில் தானே!  ஒரே மாதிரியான சம்பவங்களை அதே தொடரில் இடம்பெறச் செய்வது எந்த விதத்தில் நியாயம்.?



ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஒளிபரப்பாகும் சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகள் புதிதாக ஏதும் பதிவு செய்யப்படவில்லை போலிருக்கிறது. ஒளிபரப்பியதையே ஒளிபரப்பி போரடிக்கிறார்கள். 
நாய் வால் எழுத்தாணி ஆகாது, கூட்டி பெருக்கி சுத்தப் படுத்தினாலும் சுடுகாடு வீடாகாது தாய் பேச்சைக் கேட்காத மகன் தானும் எதையும் கொடுக்கமாட்டான் பிறரையும் கொடுக்க விடமாட்டான் என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும், குருவின் உபதேசம், மனைவியிடம் பேசிய அந்தரங்கம், போன்றவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும் திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அநிகாலை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை யார் பார்த்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று சன்தொலைக் காட்சியினர் நினைகிறார்களோ?’     


27-10-2-13 ஞாயிறன்று ‘இந்த நாள் இனிய நாளுக்கும் அமுத மொழிகளுக்கு நேர்ந்த கதிதானா?’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு (இதே தளத்தில்) எழுதியிருந்தேன். அதையே எத்தனை தடவை எழுதுவது என்று அந்த பதிவின் இப்பகுதியை மறு பதிவு செய்துள்ளேன், ஏனெனில் அப்பகுதியை மீண்டும் இவ்வாரமும் ஒளிபரப்பினார்கள்.



2 கருத்துகள்:

  1. தொடர்களை வீட்டில் தான் கேட்க வேண்டும்... ஹெல்மெட் உட்பட முக்கியமானவற்றை நன்றாக கவனித்துள்ளீர்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.