குடியரசுதின தமிழக அருசுவிழாவினை மழுமையாகக் காண்பித்தது ஜெயா டீவி.
நடனங்கள் நடைபெற்றதைக் காண்பித்த போது (குறிப்பாக கோலாட்டம் பின்னல் நடனத்தின்
போதும் அதற்கு முந்திய ட்ரம் நடனத்தின் போதும்) நடனத்தை விட்டுவிட்டு
பார்வையாளர்களையும் சிலைகளையும் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். எது முக்கியம் எது முக்கியமில்லை என்று கூட
தெரியாதா படம்பிடிப்பவர்களுக்கு.
சன் தொலைக்காட்சியின் முத்தாரம் நெடந்தொடரில் நடிகை தேவயானி இரு
வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று இவருக்குப் பதில் இவர் என்று
வேறு ஒருவரை நடிக்க வைத்து விட்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து தீவிபத்தில் அவரது
முகம் சிதைந்து போனது அதனால் அவரது முகத்தை மாற்ற வேண்டும் என்று சொல்லி வேறு
ஒருவரை நடிக்க வைத்தார்கள். இப்பொழுது அந்த நெடுந்தொடரை
நிறுத்தியேவிட்டார்கள். இவர்கள்
நினைத்தால் ஆளை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் இல்லையெனில் கதையையே
மாற்றிக்கொள்ள லாம் போலிருக்கிறது. தொடர் பார்ப்பவர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை
இந்தத்தயாரிப்பாளர்கள்.
‘’மண்டைக்குள் மாவாட்ரீங்க மாவு’’ என்று கோபப்படுகின்ற பெண்ணிடம் ஒரு
பிஸ்கட்டைக் கொடுத்து இதை சாப்பிடு என்று சொல்கிறான் நண்பன். ‘’ஏண்டா?’’ என்று
அவள் கேட்க ‘’பசி வந்திட்டா நீ நீயா இருக்க மாட்டே’’ என்று சொல்கிறான் நண்பன். அதை
சாப்பிட்ட உடன் அந்தப் பெண் ஒரு அமைதியான ஆணாக மாறிவிடுகிறாளாம். இப்படி ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.
பெண்கள் இதைப் பார்த்துக்கொண்டு எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்று
தெரியவில்லை. ஒருவன் பசிவந்துவிட்டால் அவன்
அவனாக இருப்பதில்லை கோபக்காரனாக மாறிவிடுகிறான் என்று காண்பித்து விட்டு போகட்டும். கோபப்படும் ஒரு பெண்ணாக ஏன் காண்பிக்க
வேண்டும். பெண்கள்தான் இப்படி கோபப்படுவார்கள் கோபத்தில் கண்ணாபிண்ணா வென்று
பேசுவார்கள் என்று சொல்கிறார்களா இந்த விளம்ரம் தயாரித்தவர்கள்?
கதாநாயகனை அல்லது கதாநாயகி யையே இறந்து போனதாகக்காட்டி சில நாட்கள்
அல்லது சில வாரங்களுக்குப் பிறகு அவர் உயிரோடு இருக்கிறார் என்று கதையைத் தொடர்வது
பற்றி இதையெல்லாம் யார் நம்புவார்கள் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். இப்பொழுது
அதே பாணியில் வம்சம் தொடரின் கதாயாயகியான ரம்யாகிருஷ்ணன் இறந்து விட்டதாக
கதைக்கிறார்கள். (அவர்தான் இத்தொடரின்
தயாரிப்பாளர்கூட) இதை எப்படி பார்ப்பவர்கள் நம்புவார்கள் என இயக்குனர்
நினைக்கிறார்? பூ சுற்றுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
அழகிய மனைவி குளித்து
லக்ஷ்மிகரமாக காபியை எடுத்துக் கொண்டு கணவனுக்கு தர அவனது அறைக்குச் செல்கிறாள்,
காபியை டீபாயில் வைத்துவிட்டு ஜன்னலைத் திறந்து விடுகிறாள். வெளிச்சம்
கண்ணில்பட்டு கணவன் திரும்பிப் படுத்து தூக்கத்தைத் தொடர்கிறான். செல்ஃபோன் மணி
ஒலிக்கிறது. கணவன் அதை எடுத்துப் பேச, ஃபோனில் அவனது மனைவியின் குறல் ‘’குட்
மார்னிங்’’ என்று ஒலிக்க மகிழ்ச்சியில் திரும்பி மனைவியைப் பார்க்கிறான்.
காலையில் மூன்று மணிநேரம் இலவசமாகப் பேசலாம் என்ற விளம்பரம் ஒரு கவிதைபோல
படமாக்கி உள்ளனர். பாராட்டலாம்.
அந்த விளம்பரம் கொடுமை...!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. இந்த விளம்பரம் பற்றி யாருமே குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.
நீக்குஅந்த சாக்லேட் விளம்பரம் வந்தாலே எனக்கு பத்திக்கிட்டு வரும்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. அந்த விளம்பரம் பற்றி யாருமே எதிர்ப்பு தெரிவிக்காததுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.
நீக்குநம்மை எல்லாம் முட்டாள் ஆக்கத்தான் டிவி சீரியல்கள் தயாரிக்கிறார்கள்! இதை பார்ப்பது சுத்த வேஸ்ட்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
தங்கள் வருகைக்கு நன்றி. வலைச்சர அறிமுகம் பற்றிய தகவல்தந்தமைக்கும் நன்றி.
நீக்கு