சன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா
தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக்
கதைகள்’’ வித்தியாசமாக உள்ளன.
‘தெரியாமலே
ஒரு கொலை’ கதையிலும் சஸ்பென்ஸுக்கு குறைவில்லை.
ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள். அப் பெண் எப்படிஉயிரோடு வந்து தன்
காதலனைத் திருமணம் செய்து கொள்கிறாள் என்பதில் தொடங்கி கடைசி காட்சி வரை எத்தனை
எத்தனை திருப்பங்கள்.
மிக மிக அருமையான சிறுதொடர் இரு பெண்களும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்றாலும் மேக்கப்பிலோ அல்லது மேனரிசத்திலோ சிறு சிறு வித்தியாசங்களையாவது காண்பித் திருக்காலாம். (இரு வேடங்களில் எப்படி (இருக்க) நடிக்க வேண்டும் என்று.வாணி ராணி ராதிகாவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்) .
மிக மிக அருமையான சிறுதொடர் இரு பெண்களும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்றாலும் மேக்கப்பிலோ அல்லது மேனரிசத்திலோ சிறு சிறு வித்தியாசங்களையாவது காண்பித் திருக்காலாம். (இரு வேடங்களில் எப்படி (இருக்க) நடிக்க வேண்டும் என்று.வாணி ராணி ராதிகாவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்) .
ஞாயிறு காலை இடம்பெறும் அமுத மொழிகள், இந்த நாள் இனியநாள் எனும் இரண்டு பகுதிகளை ஏன் மறு ஒளிபரப்புக்களாகவே ஒளிபரப்பு செய்
கிறார்களோ புரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் இடையில் இடம் பெறும் ராசி பலன்கள் நிகழ்ச்சியையும் இப்படித்தான் மறு ஒளிபரப்புச் செய்கிறார்களோ என்ற சந்தேகமே வருகிறது. நல்ல வேளையாக ராசி பலன் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஒளிபர்\ப்பாகும் தேதியைப் படிக்கிறார் விஷால். அதனால் அது மறுஒளிபர்ப்பாகவில்லை என்று நம்பலாம்.
விஜய் டீவியில் விளம்பர இடைவேளை யின்போது விளம்பரத்தின் இடது
மேல் மூலை யில் இன்னும்..... 62 நொடிகளில் ..61 நொடிகளில் ...60 நொடிகளில் என்று
விளம்பரம் முடியும் நேரத்தைக் காண்பிக்கிறார்கள். இது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு
மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விளம்ரம் ஒளிபரப்பாகும் 4
அல்லது 5 நிமிடங்களும் இதுபோல காட்டப்படுவது இல்லை. கடைசி ஒன்று அல்லது ஒன்றரை நிமிடமே இப்படி காட்டுவதற்குப் பதில் விளம்பர நேரம் முழுமையும் இதைக் காண்பிக்கலாமே!
பத்துமணிக் கதையை இப்போது தான் பார்க்க ஆரம்பித்து உள்ளேன்...
பதிலளிநீக்குநன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்குபகிர்விற்கு நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி. கருத்துப் பதிவுக்கும் நன்றி
நீக்கு