சன்
தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணி வரையில் பல வருடங்களாக தொடர்களை ஒளிபரப்பி
வந்தார்கள். 2.30 மணிக்கு செய்திச்சுருக்கம் இடம் பெற்று வந்தது. திடீரென ஒரு
புதிய தொடரை 2.30 மணிக்கு ஒளிபரப்பத் தொடங்கிவிட்டார்கள்.
அதனால் செய்திச் சுருக்கத்தை 3.00 மணிக்கு
மாற்றி விட்டார்கள். தொடர் ஒளிபரப்பினால்
விளம்பர வருமானம் வருகிறது என்பதற்காக செய்திச் சுருக்கத்தின் established நேரத்தைக்கூட மாற்றிவிடுவதா?
அவர்கள் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்பதற்காக இப்படியா செய்வது?
பத்துமணிக்
கதைகளில் இம்மாத கதையாக ‘’மீண்டும் வருவேன்’’ எனும் சிறு தொடர் ஒளிபரப்பாகிறது. ஆரம்பத்திலிருந்தே இத்தொடர் சஸ்பென்ஸோடு மிக
அருமையாக நகர்கிறது. இதற்காக இத்தொடரின்
தயாரிப்பாளரையும், இயக்குனரையும் பாராட்டலாம்.
சாலமன்
பாப்பையா வழங்கும் அமுதமொழியாக ‘’வீணர் தங்கம் பூண்டாலும் வெறும்
பூச்சென்பார்கள்...’’ எனும் விவேக சிந்தாமணியின் பாடலுக்கான விளக்கத்தை
எத்தனைமுறைதான் ஒளிபரப்புவது? இதற்கு ஒரு அளவில்லையா? இப்படி மறுஒளிபரப்புச் செய்து சாலமன் பாப்பையாவின்
பெயரைக் கெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
‘’யானைகள்
குடிப்பதற்காக தண்ணீர் தொட்டிகளில் நீர் பிடித்து வைப்பார்களாம் அப்படி பிடித்து
வைத்த தண்ணீர் 2 நாட்களுக்கு மேல் பழைய தண்ணீர் என்றால் யானைகள் அவற்றைக்
குடிக்காமல் போய்விடுமாம். யானைகள் வயல்களுக்கு உள்ளே போய்விடாமல் தடுக்க
வேளிகளில் மின்சாரம் ஷாக் அடிப்பது போல் தடுப்புகளை அமைத்து வைத்தாலும் அந்த
யானைகள் மரக்கட்டையால் அந்த வேலிகளில் அடித்தால் ஷாக் இருக்காது என்று தெரிந்து
கொண்டு மரக்கட்டையால் அடித்து உடைத்துவிட்டுப் போகுமாம்.’’ இவற்றையெல்லாம் சுகி சிவம் அவர்கள் இந்த நாள்
இனிய நாளுக்காக சொன்ன போது ஆச்சர்யமாக இருந்தது. நல்ல நல்ல தகவல்களைத் தருகிறது
இந்தப் பகுதி.
ஏ.எக்ஸ்.என்
தொலைக்காட்சியில் கின்னஸ் சாதனைகளைக் காண்பித்து வருகிறார்கள். ஒரு பெண் ஒரே
பாடலில் ஸ்பேனிஷ், ரஷ்யன், ஜப்பானிஷ் போன்ற ஒன்பது வெவ்வேறு மொழிகளில் பாடி
அசத்திய கின்னஸ் சாதனையைக் காண்பித்தார்கள்.
இது போன்ற கின்னஸ் சாதனைகளை. இத் தொலைக் காட்சியில் பார்க்கலாம்.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குThanks for expressing your view.
நீக்குthamizmanam 7
பதிலளிநீக்குThanks for your Good gesture.
நீக்குயானைக்கு என்னே புத்திக் கூர்மை...!
பதிலளிநீக்குயானை பற்றிய தகவல்கள் கேட்க கேட்க ஆச்சர்யமாகவே இருந்தது. நன்றி.
நீக்குஇன்னுமா சன் தலைப்புச் செய்திய பார்த்து ஏமாறுறிங்க..
பதிலளிநீக்குயானை குறித்த தகவல்கள் புதிது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
நீக்கு