திங்கள், 14 ஏப்ரல், 2014

மெகா தொடர்களுக்குப் பதில் சிறு தொடர்களை அதிகம் இடம் பெறச் செய்யலாமே

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

.. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘’மனம் திரும்புதே’’ நிகழ்ச்சியில் நடிகை சொர்ணமால்யாவின் பேட்டி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது. பாரதியாரின் ‘எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான்... ‘ என்ற பாடலை சொர்ணமால்யா தன் தோழிகளுடன் சேர்ந்து கர்நாடக இசையில் பாடி அதன் வரிகளை ராப் பாடலாகவும் பாடி அசத்தினார்.  கேள்விகளுக்கு மிகவும் கேஷுவலாகப் பதில் சொன்னதும் அருமை.


சன் தொலைக்காட்சியில் பத்துமணிக் கதைகளில் இடம்பெற்ற சிறுதொடர் (குறுந்தொடர் என்று சொன்னால் நன்றாக இருக்குமோ?) மீண்டும் வருவேன் மிக மிக நன்றாக இருந்தது. எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் கடைசிவரை சஸ்பென்ஸ் குறையாமல் சற்றும் தொய்வில்லாமல் மிக நன்றாக இயக்கப்பட்டிருந்தது இந்த சிறு தொடர். .இது போன்ற நல்ல தொடர்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது இத்தொடர்.
இதுவரை சன் தொலைக்காட்சியில் இரவு பத்துமணிக்கு இடம்பெற்று வந்த 10 மணிக்கதைகளை திரு பிக்சர்ஸ் தயாரித்திருந்தார்கள்.. இம்மாதக் கதையை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இத்தொடருக்காக ‘’கதை ஒண்ணு சொல்லப் போறோம்....’’ என்ற தலைப்புப் பாடலுக்கு நடன இயக்குனர் சாந்திகுழுவினரின் நடனக்காட்சியைக் காண்பித்து வந்தார்கள் திருபிக்சர்ஸார்.  இனி அப்பாடல் இடம்பெறாதோ!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய அமுதமொழியையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்களே ‘’இந்தியத் தொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக சாலமன் பாப்பையா வழங்கும் அமுத மொழிகள் 25 வது முறையாக மறு ஒளிபரப்புச் செய்யப்படுகிறது’’ என்று அறிவித்தாலும் அறிவிப்பார்களோ?


கலைஞர் தொலைக் காட்சிக்கு தைமுதல் நாளே தமிழ் வருடப்பிறப்பு என்பதால் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பதற்குப் பதிலாக சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றே அறிவிக் கிறார்கள். .சன்தொலைக்காட்சியோ தன் பிறந்த நாளை கொண்டாடுவதால் அவர்களும் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதில்லை (மற்ற தொலைக்காட்சிகளுக்கு இது தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்.)  எது எப்படி இருந்தாலும் விளம்பரங்கள் போய்விடக்கூடாதே என்பதற்காக சிறப்பு நிகழ்ச்சிகள் மட்டும் உண்டு. 

5 கருத்துகள்:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். ஜய வருடத்தில் அனைவருக்கும் நினைத்ததெல்லாம் ஜயமாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் ஜயவருட புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு
  3. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.