ஞாயிறு, 21 மே, 2017

‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்

சின்னச் சின்ன சிந்தனைகள்

பழைய அனுபவத்தின் அடிப்படையில் 90 சதவீத முடிவுகளை உடனடியாக எடுத்துவிடலாம், 10 சதவீத முடிவுகளுக்குத் தான் தீவிர பரிசீலனை தேவைப்படும்.

குறிப்பிட்ட பிரச்சினை எதைப்பற்றியும் நாம் யோசிக்காமல் இருக்கிறோம் என்றால் பொதுவாக நம் நேரத்தில் 95 சதவீதம் நம்மைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம்.

ஆளுக்கு ஒவ்வொரு ரூபாய் இருந்து அதை இருவரும் மாற்றிக் கொண்டால் இருவரிடமும் ஒரு ரூபாய்தான் இருக்கும். உங்களிடம் ஒரு நல்ல ஐடியாவும் என்னிடம் ஒரு நல்ல ஐடியாவும் இருந்து இருவரும் அவற்றை மாற்றிக் கொண்டால் நம்மிடம் இரண்டு ஐடியாக்கள் இருக்கும்.

எந்த முட்டாளும் ஒரு விஷயத்தைப் பற்றி விமர்சிக்கலாம், பழித்துப் பேசலாம், புகார் செய்யலாம்பெரும்பாலான முட்டாள்கள் அதைத்தான் செய்கிறார்கள்.

உங்கள் பகைவனுக்காக நீங்கள் மூட்டும் தீ அவரை சுடுவதை (எரிப்பதை)  விட அதிகமாக உங்களையே சுடும் (எரிக்கும்) என்பதை மறவாதீர்கள்.

உலகில் ஏதோ இருக்கிறேன் என்று சொல்வது போல் இருக்காதீர்கள்வாழத்துவங்குங்கள். 

‘’நேர்மை’' இன்றும் கூட சிறந்த கொள்கைதான்ஆனால் சிறிது  ‘’பொது அறிவுடன்’’ இருந்தால் நல்லது..

ஒவ்வொரு பிரச்சினையையும் உங்கள் வழியை மறைக்கும் சுற்றுவழியில் போகவைக்கும் தடைக்கல்லாகக் கருதவேண்டும்.


இதைப்போன்ற நேரங்களில் உங்கள் மனது சுறுசுறுப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால் நிச்சயம் நல்வழி கிடைக்கும்.

இருவரும் ஒன்றாக இருக்க முடிவெடுப்பது நல்ல ஆரம்பம்

இருவரும்  ஒன்றாக இருப்பது நல்ல முன்னேற்றம்

இருவரும் இணைந்து செயல்படுவது என்பது வெற்றிக்கு வழி.

 

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  2. //உலகில் ஏதோ இருக்கிறேன் என்று சொல்வது போல் இருக்காதீர்கள் –//

    உண்மைதான்.. செய் அல்லது செத்துப்போ.. இதுதான் என் கருத்தும்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி உங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி
    வாழத்துவங்குங்கள் என்று வழிகாட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.