வெள்ளி, 19 மே, 2017

வலி இல்லாமல் லாபம் இல்லை.

சின்னச் சின்ன சிந்தனைகள்

எழுந்து நின்று என்ன நினைக்கிறானோ அதைச் சொல்பவனிடம் தலைமைப் பதவி வந்து சேரும். 

யோசிக்கும் கஷ்டத்தை தவிர்க்கும்படியான சூழ்நிலை என்பது ஏதும் இல்லை 

பட்டங்கள் காற்றை எதிர்த்து உயர்வதில்லை காற்றின் போக்கில் காற்றுடனேயே உயர்கின்றன.

உரசல் இல்லாமல் வைரம் பட்டை தீட்டப்படுவதில்லை சோதனை இல்லாமல் மனிதன் முன்னேற முடியாது

போட்டிகளில் தைரியமாகக் கலந்து கொள்ளாமல் மெடல்களைப் பெறமுடியாது

வலி இல்லாமல் லாபம் இல்லை. (No pain No gain)

        சாதாரண மனிதர் தனது மூளையின் திறமையில் 10 சதவீதம் அளவிற்கே மேம்படுத்துகிறார்.

ஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும் செய்வதற்கு சில வேலைகள் இருக்கும் வரையில் வாழ்க்கையுடன் போராடும் அவசியம் ஏதும் இல்லை.

நீங்கள் விரும்புகின்ற வேலையை தேர்ந்தெடுத்து அதில் சேருங்கள். உங்கள் வாழ்வில் ஒரு நாளும் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே தோன்றாது.

 ஒரு மரத்தை வெட்ட 8 மணி நேரம் இருக்கிறது என்றால் கோடரியைக் கூர்மையாக்க அதிகமான நேரத்தை செலவிட வேண்டும்.

4 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை...

    மரம் வளர்க்க பல நாட்கள் ஆகும்...

    பதிலளிநீக்கு
  2. சாதாரண மனிதர் தனது மூளையின் திறமையில் 10 சதவீதம் அளவிற்கே மேம்படுத்துகிறார்
    ////
    மொத்தமா மேம்படுத்தினா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
      பொதுவாக சாதாரண மனிதரின் நிலை இது.
      ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை நினைவில் வைத்து செய்யக் கூடிய அளவு திறமையை வளர்த்துக் கொண்டவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள். முயன்று பயிற்சி செய்தால் இன்னும் அதிக மேம்பாடு காணலாம்தானே!

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.