புதன், 21 செப்டம்பர், 2011

சீரியல் தயாரிப்பாளர்கள் என்னதான் சொல்கிறார்கள்?



‘முந்தானை முடிச்சு’ சீரியலில் முத்துவின் சித்தப்பா பழனியப்பன் முத்துவிடம் ‘’ நீ முதலாளி வேலையைச் செய்யாதே, மூட்டை தூக்கற வேலையை மட்டும் செய்’’ என்றுசொல்லி விடுகிறாராம்.  சித்தப்பா அப்படி திட்டிவிட்டதால் முத்து மனம் உடைந்து போய் மது அருந்து கிறார்.
‘’தென்றல்’’ தொலைகாட்சித் தொடரில் தமிழின் அண்ணனும் அண்ணியும் தமிழைத் திட்டுகிறார்கள் அதனால் மனம் வெறுத்துப் போன தமிழ் மது அருந்தப் போகிறார்.
‘செல்லமே’ தொலைகாட்சித் தொடரில் சுரேஷ் தன் அப்பா ஏ கே தொடர்ந்து கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல் மது அருந்து கிறார்.
‘திருமதி செல்வம்’ தொலைகாட்சித் தொடரில் செல்வத்தின் அப்பாவும், தம்பி வாசுவும் அவ்வப்போது மனகக்கஷ்டம் என்று மது அருந்துவதாகக் காட்டுகிறார்கள்.
ஆக யாருக்கவது மனக்கஷ்டம் என்றுவந்தால் அவர்கள் மது அருந்துவதைப் போலவே காட்சிகளை அமைக்கிறார்கள் தொடர் தயாரிப்பவர்கள். ஆகவே மனக்கஷ்டம் வருபவர்கள்  மது அருந்துவதுதான் ஒரே தீர்வு என்று சொல்கிறார்களா? இப்படிப் பட்ட காட்சிகளில் ‘’குடி குடியைக் கெடுக்கும்’’ என்று  காண்பித்துவிட்டால் போதுமா?
இனியாவது இப்படிப் பட்ட காட்சிகளைத் தவிர்ப்பார்களா அல்லது குறைந்த பட்சம் தவிர்க்க முயற்சியாவது செய்வார்களா?

18 கருத்துகள்:

  1. சீரியல்களில் மட்டுமா? சினிமாக்களிலும்தான் இப்படி காட்சிகளை வைத்துத் தொலைக்கிறார்கள். குடிப்பது கவலைகளுக்கு ஒருபோதும் மருந்தாகாது. உங்களின் கவலை எனக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
  2. கணேஷ் said.
    "குடிப்பது கவலைகளுக்கு ஒருபோதும் மருந்தாகாது"

    மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. யாருக்கவது மனக்கஷ்டம் என்றுவந்தால் அவர்கள் மது அருந்துவதைப் போலவே காட்சிகளை அமைக்கிறார்கள் தொடர் தயாரிப்பவர்கள். ஆகவே மனக்கஷ்டம் வருபவர்கள் மது அருந்துவதுதான் ஒரே தீர்வு என்று சொல்கிறார்களா? இப்படிப் பட்ட காட்சிகளில் ‘’குடி குடியைக் கெடுக்கும்’’ என்று காண்பித்துவிட்டால் போதுமா?//உங்களின் கவலை எனக்கும் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. மாலதி said...
    ''உங்களின் கவலை எனக்கும் உண்டு''.

    தங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  5. மக்கள் இந்த தொ(ல்)லைக்காட்சிகளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால் இந்தக் கவலை அர்த்தம் பொதிந்துள்ளது.. தொடர்ந்து இதே போல வந்தால் இதுதான் தீர்வோ என்று தோன்றி விடும்.. தவறான காட்சி அமைப்பை வைக்கும் சீரியல்காரர்கள் யோசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. இனியாவது இப்படிப் பட்ட காட்சிகளைத் தவிர்ப்பார்களா அல்லது குறைந்த பட்சம் தவிர்க்க முயற்சியாவது செய்வார்களா?/

    நிச்சயம் தவிர்க்கவேண்டும் எதிர்கால நலன் கருதி.

    பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சீரியல் தயாரிப்பாளர்கள் டாஸ்மாக் ஏஜண்டுகள் என்று தெரிகிறது

    பதிலளிநீக்கு
  8. இதுபோல் நிறைய எழுதுங்கள்....சுட்டிக்காட்டப்படாத தவறுகள் திருத்தப்படாது....

    பதிலளிநீக்கு
  9. //goma said...

    இதுபோல் நிறைய எழுதுங்கள்....சுட்டிக்காட்டப்படாத தவறுகள் திருத்தப்படாது//

    'சுட்டிக்காட்டப்படாத தவறுகள் திருத்தப்படாது''என்று மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. "Kanchana Radhakrishnan said...

    "பகிர்வுக்கு பாராட்டுக்கள்"
    தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  11. ரிஷபன் said...
    "... தொடர்ந்து இதே போல வந்தால் இதுதான் தீர்வோ என்று தோன்றி விடும்.. தவறான காட்சி அமைப்பை வைக்கும் சீரியல்காரர்கள் யோசிக்க வேண்டும்."

    உங்கள் கருத்து மிகச் சரியானது நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ராஜராஜேஸ்வரி said...

    "...இனியாவது இப்படிப் பட்ட காட்சிகளை நிச்சயம் தவிர்க்கவேண்டும் எதிர்கால நலன் கருதி.

    பகிர்வுக்கு பாராட்டுக்கள்"

    சரியான கருத்து. பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மதுவை பத்தியாவது அப்பப்போதான் வருது, ஆனா பெரும்பாலான சீரியல்கள் கள்ளக்காதல்களை அடிப்படியா வெச்சுத்தான் எடுக்கறாங்களாமே? (நான் சீரியல் பாக்கறதில்லீங்க....)

    பதிலளிநீக்கு
  14. word verification ஐ எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்.....

    பதிலளிநீக்கு
  15. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //word verification ஐ எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்.//
    தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஆலோசனைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சீரியல் பாக்கற பழக்கம் எனக்கு எப்பவுமே இருந்ததில்லைங்க....ஆனா உங்க வருத்தம் புரியுது. எவனோ ஒரு தீவெட்டி, தண்ணி அடிச்சா பிரச்சனையை மறக்கலாம்னு சொல்லிட்டான்....சரியோ தப்போ...நாமும் அதையே 'கடைபிடிப்போம்', எதுக்கு தேவை இல்லாம மண்டைய போட்டு கொழப்பிக்கனும்னு, கதை எடுக்க வர்றவன் எல்லாம் ஒத்து ஊதறான்.

    பதிலளிநீக்கு
  17. அனு said...

    //சீரியல் பாக்கற பழக்கம் எனக்கு எப்பவுமே இருந்ததில்லைங்க....ஆனா உங்க வருத்தம் புரியுது. எவனோ ஒரு தீவெட்டி, தண்ணி அடிச்சா பிரச்சனையை மறக்கலாம்னு சொல்லிட்டான்...//

    உங்கள் ஆதங்கம்தான் எனக்கும். உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.