ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்


ஜெயா தொலைக்காட்சியில் கீழே உள்ளது போன்ற ஒரு அறிவிப்பு வெளி யிடப்பட்டது;-
தொழில்நுட்ப காரணங்களால் அறிவிக்கப் பட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக பால்கே சாஹிப் விருது பெற்ற கே பாலச்சந்தர் அவர்களுடனான நேர்காணல் ஒளிபரப்பாகும்.
‘’பால்கே சாஹிப் விருது பெற்ற கே பாலச்சந்தர் அவர்களை கௌரவிக்கும் வகையில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களுடனான நேர்காணல் ஒளிபரப்பாகும் ‘’ என்று அறிவித்திருந்தால் அவரை கௌரவித்ததாக இருந்திருக்கும்.  ‘’தொழில்நுட்ப காரணங்களால் அறிவிக்கப் பட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக’’ இந்நிகழ்ச்சியை ஒளிபரிப்புவதாக அறிவித்தது வேறு வழியில்லாமல் ஒளிபரப்பியது போல் அல்லவா இருக்கிறது.  இனியாவது அறிவிப்புகளை கடனே என்று  போடாமல் யோசித்து சரியாக அறிவிக்க  கேட்டுக்கொள்கிறேன்
 
‘’கலர்ஸ் ‘’ என்ற தொலைக்காட்சியில் ‘’ இந்தியா ஹேஸ் காட் டேலன்ட்’’ என்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பல சுற்றுக்கள் முடிந்து கால் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதால் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் மிகவும் அருமையாக இருந்தன. குழுவினர் பாடிய பாடலாகட்டும், நடனமாகட்டும், ஆடலுடன் வந்த பஞ்சாபி பாடலாகட்டும், மற்ற பகுதிகளாகட்டும் அனைத்துமே மனதைக் கவர்வதாக அமைந்திருந்தன. இனி வரும் அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்களில் இனிமையாக அமையும் என்றதில் சந்தேகமேயில்லை. முடிந்தால் பார்க்கலாம்

2 கருத்துகள்:

  1. வியக்கவைத்த தங்களின் அருமையான வலைப்பதிவுக்கு முதல் பாலோவர் ஆகிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி said...
    வியக்கவைத்த தங்களின் அருமையான வலைப்பதிவுக்கு முதல் பாலோவர் ஆகிவிட்டேன்.

    முதல் பாலோவருக்கு நல்வரவு, நன்றியுடன்

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.