சன் டீ.வி டைரக்ட் டு ஹோம்
சன் டீ.வி டைரக்ட் டு ஹோம் இணைப்பை வாங்கியதால் பிரச்சினையை விலைக்கு வாங்கி விட்டோமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம் அதற்கு ரீசார்ஜ் செய்வதில் இருக்கும் சிரமம், ‘எல்லா சேனல்களிலும் படம் தெரியவில்லை கருப்பாக தெரிகிறது’ என்று புகார் செய்து அதனை சரி செய்வதில் இருக்கும் சிரமம் என எல்லாவற்றிலும் சிரமம் தான்.
முதலில் சன் டீவி யின் அலுவலருடன் பேச இணைப்பு கிடைப்பதே சிரமம் தான். நம் ஸ்மார்ட் கார்டு எண்ணை பதிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் ஸ்மார்ட் கார்டு எண்ணை பதிவு செய்தவுடன் அதை உறுதி செய்ய நேரம் போகும். உறுதி செய்த பிறகு நம் கணக்கின் விவரங்களை இயந்திரம் அறிவிக்கும் (அதுவும் நம் ஃபோன் காசில்). இவ்வளவக்கும் பிறகே அந்த அலுவலரின் இணைப்பைத் தருவதாக அறிவிப்பு வரும். ஆஹா அவரிடம் பேசப்போகிறோம் என்று நினைத்தால் அதுதான் இல்லை. அவரோ அல்லது அந்த அம்மாவோ பேசுவதற்குள் திரும்பவும் விளம்பரம் (அதே விளம்பர இடைவேளை இன்றி ஒளிபரப்பப்படும் சினிமா பற்றிய அறிவிப்பு – காதிலிருந்து இரத்தம் வரும் வரை திரும்ப திரும்ப திரும்ப ………. வந்து கொண்டே இருக்கும். இவ்வளவுக்கும் பிறகே அந்த இணைப்பு கிடைக்கும்
உங்கள் பெயர், உங்கள் விலாசம், நீங்கள் கஸ்டமரா, டீலரா. இணைப்பு உங்கள் பெயரில்தான் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு விட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். இதற்குள் போதுமடா சாமி என்று தோன்றி விடும்.
இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகு ‘எல்லா சேனல்களிலும் படம் தெரியவில்லை கருப்பாக தெரிகிறது’ என்று புகார் செய்தேன் பத்து நாட்களுக்கு முன். வயர்களை எடுத்து விட்டு திரும்ப கனெக்ட் செய்யுங்கள் என்று கூறினார் பலன் ஏதும் இல்லை. 48 மணி நேரத்திற்குள் சரியாகும் என்று சொன்னார்.
இரண்டு நாட்களாகியும் இணைப்பு வரவில்லை என்று மேலே பட்ட அதே அவஸ்தைகளுக்குப் பிறகு ஒரு பெண் பேசினார் அவர் மெனுவில் போய் அதைச் செய்யுங்கள் இதைச்செய்யுங்கள் என்று கூறினார். பலன் எனனவோ பூஜ்யம்தான். 24 மணி நேரத்திற்குள் மெக்கானிக வருவார் அவர் சரி செய்வார் என்று சொனனார். அதற்குப் பிறகு மூன்று நாட்களாகியும் யாரும் வரவில்லை பிரச்சினை அப்படீயேதான் இருந்தது.
திரும்ப திரும்ப நினைவு படுத்த தொலைபேசியில் மேலே கூறிய அவஸ்தை களோடு கால் சார்ஜையும் வீணாக்கியும் பத்து நாள் வரை யாரும் வரவில்லை டீவி சேனல்களும் தெரியவில்லை. எவ்வளவு முறை நினைவு படுத்தினாலும் அதே பதில்கள், சமாதானங்கள். அந்த நாட்களுக்குக் கட்டிய பணமும் வே.ஸ்ட் ஃபோன் பேசிய காசும் வேஸ்ட். இதை யார் தருவார்கள்.
யாரும் வந்து சரிசெய்யாமலே தானாகவே சரியாகிவிட்டது என்பது வேறு விஷயம். சன் டீவி போன்ற பெரிய நிறுவனங்களில் இது போன்ற விஷயங் களை மேலிருப்பவர்களுக்குத் தெரிவிக்க ஒரு ஈ மெயில் ஐ டிகொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் எத்தனையோ பிரச்சினைகள் உள்ள மேலதிகாரிகள் இதிலெல்லாம் கவனம் செலுத்துவார்களா? கவனம் செலுத்த நேரம்தான் அவர்களுக்கு இருக்கிறதா?
நினைவு படுத்தினாலும் அதே பதில்கள், சமாதானங்கள். அந்த நாட்களுக்குக் கட்டிய பணமும் வே.ஸ்ட் ஃபோன் பேசிய காசும் வேஸ்ட். இதை யார் தருவார்கள்./
பதிலளிநீக்குதொல்லை. சொந்த செவில் சூன்யம்.
"இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குதொல்லை. சொந்த செலவில் சூன்யம்."
தொல்லை ..... ஆம் இது தொ(ல்)லைக் காட்சிதானே! மிக அருமையாகச் சொன்னீர்கள்.