சன் தொலைக்காட்சியில் சாம்பியன் நிகழ்ச்சியில்
நன்கு தம் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு நிகழ்ச்சியின் நடுவர்கள் இருவரும் ஆளுக்கு
5000 புள்ளிகள் வீதம் மொத்தம் 10,000 புள்ளிகள் தந்து அதை அப்பிடியே பணமாக மாற்றி
ரூபாய் 10,000 க்கான காசோலையை தந்தது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. ஆனால் சில
சமயங்களில் மாற்றுத்திறனாளிகள் நால்வராக அல்லது ஐவராக வந்து தங்கள் திறமையை
காண்பிக்கும் போதும் அவர்களுக்கும் அதே ரூபாய் பத்தாயிரத்தைதான் தருகிறார்கள். இது
சற்று நெருடலாக இருந்தது.. அந்த நிகழ்ச்சியின் சார்பாக கொடுக்கும் அந்த தொகை
நியாயமானதாக இருக்கலாம். அந்த நேரங்களில் சன் தொலைக்காட்சியின் சார்பாக அந்த
வெகுமதி இல்லாமல் சற்று கூடுதலாக ஒரு தொகையை அந்த திறமைசாளிகளுக்கு கொடுத்தால்
அவர்களுக்கு இது ஒரு ஊக்குவிப்புத் தொகையாக மட்டுமில்லாமல் உதவித்தொகையாகவும்
அமையுமே. இதை சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலனை செய்வார்களா?
முன்பே
குறிப்பிட்டது போல அமுதமொழிகளில் சாலமன் பாப்பையா ஏற்கனவே சொன்ன விவேக
சிந்தாமணியின் தாய் பகையானால் விளக்கத்தை மீண்டும் ஒளிபரப்பி, சுகிசிவம் அவர்கள்
சொன்ன சிலம்பொலி செல்லப்பா அவர்களின் பெருமையையும் மறு ஒளிபரப்பு செய்தார்கள்.
காலையில் எழுந்து ஆவலுடன் இந்நிகழ்ச்சிகளை பார்க்க டீவி முன் உட்காருபவர்களை
இப்படி எத்தனை நாட்களுக்குத் தான் ஏமாற்றுவார்களோ தெரியவில்லை. (ஏமாற நீங்கள்
எல்லாம் இருக்கும் வரை என்று சொல்வது என் காதுகளில் விழுகிறது) இத்தகவல்கள் விழ
வேண்டியவர்கள் காதுகளில் விழாதது ஏன் என்றுதான் புரியவில்லை. (ராசிபலன்களும்
இப்படிப்பட்ட மறு ஒளிபர்பாகத்தான் இருக்குமோ!)
சன் செய்திகளில்
சிறப்புப் பார்வையில் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரழப்புகள் பற்றியும்,
விபத்துக்களுக்கான காரணங்கள் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமூறைகள் பற்றியும்
விளக்கினார்கள். மிகவும் பயனுள்ள அலசல் இது.
எதை எதையோ மறு ஒளிபரப்புச் செய்பவர்கள் இதை மறுஒளிபரப்புச் செய்தால் ஓரிரு
விபத்துக்களாவது குறையுமே! (ஜனவரிமாதம்
முதல்வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக அகில இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது
என்பது அனைவரும் அறிந்ததே அந்த நேரத்தில் இவற்றை ஒளிபரப்புச் செய்து அந்நிகழ்வில்
சன் தொலைக்காட்சியும் பங்கேற்கலாமே)
தெய்வமகள்
தொடரில் காலம்தான் சிலவிஷயங்களுக்கு தீர்வு சொல்லவேண்டும் என்று சொல்லும் சுரேஷ்
காலத்திற்காக பொறுத்திருக்காமல் ‘’இந்த நேரத்தில் தாரிணி கழுத்தில் தாலி
கட்டுகிறேன்’’ என்று கூறி கோவிலில் உறவினர் யாரும் இல்லாத நிலையில் தாரிணியைத்
திருமணம் செய்து கொள்கிறானாம். ‘’எனக்குத் தெரியாமல் என்னைத்தூக்கி
வந்துவிட்டீர்கள். நான் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்’’ என்று கூறி தாரிணியை
வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தால்தான் அவனது பாத்திரத்திற்கு பொருத்தமாக
இருந்திருக்கும். இப்படி ஒரு பாத்திரத்தை ஒரு விதமாக சித்தரித்து திடீரென வேறு
விதமாக மாற்றுவது இயக்குனர் குமரனுக்கு வாடிக்கைதானே (இதற்கு (திருமதி) செல்வமே
நல்ல உதாரணம்) .
நீங்கள் சொல்வது சரி... உண்மையான திரைசாலிகள்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்குஉண்மையான திரைசாலிகள்தான்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்கு