கூப்பிட்டவர் காரணமா கார் ஓட்டும் போது
எடுத்துப் பேசியவர் காரணமா?
‘புது யுகம்’ தொலைக் காட்சியில் குரு சிஷ்யன் நிகழ்ச்சியில் நடிகர் நாசர் இயக்குனர் மிஸ்கின் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி இடம் பவற்றது. அந்நிகழ்ச்சியில் நாசர் ஒரு பக்கம் பார்ப்பது போலவும் மிஸ்கின் இன்னொரு பக்கம் பார்த்து பேசுவது போலவும் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். வித்தியாசமாக எதாவது செய்யவேண்டும் என்பதற்காக பார்ப்பவர்களை இம்சிக்கக்கூடாதல்லவா? (தனியாக ஒருவரை மட்டும் காட்டுவது வேறு) இருவரும் இரண்டு திசைகளில் பார்த்துக்கொண்டு பேசுவது எப்போதோ ஓரிரு முறையல்ல தொடர்ந்து அப்படியே காண்பித்தார்கள் என்பதுதான் கொடுமை.
·
நாதஸ்வரம் தொடரில் மனைவி தொலைபேசியில் அழைக்க
காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவளது கணவன் காரை ஓட்டிக்கொண்டே செல்ஃபோனை எடுத்துப்
பேச கார் பெரும் விபத்துக்குள்ளாகி படுகாயமடைகிறார் செல்வரங்கம். கணவர் காயமடைய
தானே காரணமாகிவிட்டதாக மனைவி புலம்புகிறார். நான் பேசியதால்தானே இப்படி நடந்தது என
கணவன் சொல்வதாகக் காட்டியமைக்கு இயக்குனரைப் பாராட்டலாம்.
கூப்பிடுபவர்களுக்கு
மறுமுனையில் இருப்பவர் என்ன செய்கிறார் என்று எப்படித் தெரியும். கூப்பிடப்படுபவர்
கார் ஓட்டிக்கொண்டிருந்தால் காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு பேசலாம் அல்லது பிறகு
பேசுகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டுப் பிறகு பேசலாம். இதனை இன்னும் கொஞ்சம்
அழுத்தமாக சொல்லி விபத்துக்களை குறைக்க உதவி இருக்கலாம்..
·
முந்தானை முடிச்சு தொடரில் பத்திரப் பதிவு
அலுவலகத்திலும் காவல் நிலையத்திலும் கந்தசாமி குடும்பத்தினரும் பழனியப்பனும் நெடுநேரம்
கடும் வாக்குவாதத்தில் ஈடுபடு வதாகக் காண்பித்தார்கள். ஒரு அலுவலகத்தில் இப்படி
சத்தம் போட்டு வாக்குவாதம் செய்வதை யாரும் தடுக்காமல் இருப்பது எப்படி? வாணி ராணி தொடரிலும் இப்படி காவல் நிலையத்தில்
நடக்கிறது இதையும் யாரும் கேட்கவே இல்லை. காவல்நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டர்
இல்லை என்று விளக்கம் சொலவார்களோ?!
செல்போன் பேச்சு
பதிலளிநீக்குஅவசியம் யாவரும்
உணரவேண்டியது நண்பரே
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்குயாவரும் உணரவேண்டியது இது என்று மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டாமல் இருந்தால் பெரும்பாலான விபத்துக்களை தவிர்த்து விடலாம்.
நன்றி
கவனத்தில் கொள்ளவேண்டியவைகளை பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்க்ள்..!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
நீக்குஅனைவரும் அவசியம் உணர வேண்டியவை...
பதிலளிநீக்குபாராட்டுக்கள்....
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. அனைவரும் உணர்ந்தால் நல்லது
நீக்கு//விபத்துக்கு காரணம் போனில் கூப்பிட்டவரா அல்லது போனில் பேசியவரா?///
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா.. தலைப்பு சிரிக்க வைக்கிறது. நல்ல கேள்வி.
தலைப்பை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தேனாக்கும். (எல்லோரையும் பார்க்க வைக்க வைத்தது தான் இத்தலைப்பு) நன்றி
நீக்குஅனைவரும் சிந்திச்சு செயல்பட வேண்டிய , அனைவருக்கும் உபயோகமான அலசல்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி.
நீக்குஅனைவரும் சிந்தித்து செயல்பட்டால் நல்லது