செவ்வாய், 24 டிசம்பர், 2013

சிரிக்க வைக்க என்ன செய்யலாம்?

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அது இது எது என்னும் நிகழ்ச்சியில் சிரிச்சாப் போச்சு பகுதியில் சிரிக்க வைக்க வருகிறவர்கள் தம் நகைச்சுவைத் திறமையைக் காண்பித்து விருந்தினர்களை சிரிக்கவைக்க வேண்டும். ஆனால் அதில் வருகிறவர்கள் விருந்தினர் அருகில் போய்நின்று கிச்சுகிச்சு மூட்டாத குறையாக சிரிங்க சிரிங்க என்று சொல்வதும் டேபிளில் இருந்து கையை எடுக்காதே என்று சொல்வதும் சரியில்லையே! இனியாவது இவற்றை அனுமதிக்காமல் தூர இருந்தே சிரிக்க வைக்க முயற்சிப்பார்களா?


சன் தொலைக்காட்சியில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களைப் பற்றிய சிறப்பு தகவல்களை தந்தார் சுகிசிவம் அவர்கள். அவருக்கு சீராச்செல்வர் என்ற பெயர் உண்டு- சீராப் புராணத்தின் விளக்கங்களைச் சொல்வதாலும் சீராதவர் (கோபப்படாதவர்) என்பதாலும் அப்பெயர் அவருக்குப் பொருத்த மானதே என்றும் அவர் கூறியவை இதற்குமுன்னதாக இருமுறை ஓளிபரப்பப் பட்டதே! (நான் பார்க்காத போது எத்தனைமுறை ஓளிபரப்பானதோ அது எனக்குத் தெரியாது). கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியிலும் அவரது உரை இடம்பெறும் என்று விளம்பரப் படுத்துகிறார்களே அதையாவது புதிதாகப் பதிவு செய்து ஒளிபரப்புவார்களா அல்லது அதையும் முன்பு ஒளிபரப்பியதைத் தேடிப்பிடித்து மறுஒளிபரப்புச்செய்வார்களா?

சன்தொலைக்காட்சியின் தெய்வமகள் தொடரில் தாரிணியை வெகுளியாக அப்பாவியாக சித்தரித்து வந்தார்கள். இப்போதோ அவரை ரொம்ப விவரமான வராகக் காண்பிக்கிறார்கள். தாரிணி தன் மாமியாருடன் வரும் வழியில் பிரகாஷின் அண்ணியை பார்த்தபோது அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, வீட்டில் அதுபற்றி விசாரிக்கும் போது தான் அப்படி காலில் விழவில்லை என்று சாதிக்கிறார்.  வெகுளியான தாரிணி நிச்சமாக இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டாள். கதையை சுவாரஸ்யமாக்க இப்படி பாத்திரத்தின் குணத்தையேவா மாற்றுவது. தொடர் என்றால் எதையும் பார்க்க க்கூடாதோ!

------------------------------------------------------------------------
தினத்தந்தி தொலைக் காட்சியில் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் வெட்டியான் வேலைபார்க்கும் பிதாமகள்களை சந்தித்துப் பேசினார் குஷ்பு. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் வேலையை மிகத்தைரியமாக செய்யும் அவர்கள் அந்த வேலையை ஒரு தர்மமாகவே செய்வதாகச் சொன்னார்கள். ‘எங்களுக்கு உடம்புக்கு ஏதும் வந்தால் எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் கேட்டதில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. அரசு சார்பில் வேலை செய்யும் அவர்களுக்கு அரசு ஏதும் உதவலாமே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.