ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாளுக்கும் அமுதமொழிகளுக்கு நேர்ந்த கதிதானா?









சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகி நெடுந்தொடரில் பாத்திரங்கள் வசனம் பேசாத நேரங்களில் பின்னணி இசையைப் போடுகிறார்கள். வசனத்தின் ஒலியைவிட பின்னணி இசையின் சத்தம் மிக அதிகமாக உள்ளது. அந்த பின்னணி இசை பார்ப்பவர்களின் காதுகளை பாதிக்கிறது. இது ஏதோ ஒரு சில எபிசோட்களில்தான் அப்படி இருக்கிறது என்று பார்த்தால் எல்லா நாட்களுமே அப்படி காதுகளை பாதிக்கும்படிதான் இருக்கிறது.  அந்த தொடர் தயாரிப்பாளர்கள் இதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஒளிபரப்பாகும் சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகள் புதிதாக ஏதும் பதிவு செய்யப்படவில்லை போலிருக்கிறது. ஒளிபரப்பியதையே ஒளிபரப்பி போரடிக்கிறார்கள். நாய் வால் எழுத்தாணி ஆகாது, கூட்டி பெருக்கி சுத்தப் படுத்தினாலும் சுடுகாடு வீடாகாது தாய் பேச்சைக் கேட்காத மகன் தானும் எதையும் கொடுக்கமாட்டான் பிறரையும் கொடுக்க விடமாட்டான் என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும், குருவின் உபதேசம், மனைவியிடம் பேசிய அந்தரங்கம், போன்றவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும் திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அநிகாலை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை யார் பார்த்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று சன்தொலைக் காட்சியினர் நினைகிறார்களோ?’

நாதஸ்வரக் கலைஞர் நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை அவர்களிடம் தவில் வாசித்து வந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்  அவர்கள் யாராவது எங்காவது ‘நாகப்பட்டனம்’ என்று ஊர் பெயரைச் சொன்னால் அவர் எழுந்து வணங்கிவிட்டு உட்காருவாராம். தன் குருவிடம் அவர் கொண்டிருந்த மரியாதையைப்பற்றி சுகிசிவம் அவர்கள் கூறிய விவரத்தை மீண்டும் இன்று இந்த நாள் இனியநாள் பகுதியில் ஒளிபரப்பினார்கள். போகிற போக்கைப் பார்த்தால் சுகிசிவம் அவர்களின் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சிக்கும் அமுதமொழிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஏற்படும் போல் இருக்கிறது. சன் தொலைக்காட்சியும் மறுஒளிபரப்பு தொலைக்காட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது போல தெரிகிறது..  




6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  2. மறுஒளி பரப்பிற்கென்று ஒரு தொலைக் காட்சியா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி மாறிவிடக்கூடாது என்றுதான் எழுதியிருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்தைப் பதிவிட்டமைக்கும் நன்றி

      நீக்கு
  3. மறு ஒளிபரப்பு நாடகங்கள் மட்டுமல்ல.. படங்களும்தான்ன்.. அதை என்னவெனச் சொல்வது..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. athira31 October 2013 07:14
      மறு ஒளிபரப்பு நாடகங்கள் மட்டுமல்ல.. படங்களும்தான்ன்.. அதை என்னவெனச் சொல்வது..?

      மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். படங்களின் மறு ஒளிபரப்புப் பற்றி தன்ப் பதிவே போடவேண்டும். நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.