செவ்வாய், 15 அக்டோபர், 2013

lதொடர்கள் சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பப் படுவதால் யாருக்கு நன்மை அதிகம்?


சன்தொலைக்காட்சியில் இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த மெகாதொடர்களில் பெரும்பாலனவை சனிக்கிழமை களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. அதாவது மாலை 6.30 மணிமுதல் 9.00 மணி வரை ஒளிபரப்பப்படும் தொடர்கள் மட்டும் சனிக்கிழமைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளன. அதனால் இது ரொம்ப நாள் நீடிக்காது. உடனே சந்தோஷப் படாதீர்கள். சனிக்கிழமைகளில் 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு வேறு நேரங்களை ஒதுக்கிவிட்டு 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படும் தொடர்களையும் நீட்டித்துவிடுவார்கள் ஏனென்றால் அவற்றில் ராதிகா தொடரும் விகடன் தொடர்களும் உள்ளனவே..

இந்த தொடர்களைப்பார்த்து இவற்றிற்கு அடிக்ட் ஆகிவிட்டவர்களுக்கு இது நற்செய்தியாக இருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு சனி ஞாயிறுகளில் போர் அடிப்பது போல உணர்ந்து வந்தவர்கள்.   இத்தொடர்களால் குடும்ப உறுப்பினர்களோடு பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை, மனைவிமார்கள் கணவனையும், குழந்தைகளையும் அத்தொடர் நேரங்களில் சரியாக கவனிப்பதில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இவ்வேதனை மேலும் ஒரு நாள் கூடுவதால் அவர்கள் இந்த நீட்டிப்பை வரவேற்க மாட்டார்கள். எது எப்படியோ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விளம்பர வருமாணம் கூடுவதால் அவர்களுக்கு சந்தோஷமாகவே இருக்கும்.

இத்தொடர்களை ஜவ்வாக இழுத்து பல மாதங்கள் வருடங்கள் என நீட்டித்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு ஒவ்வொரு வாரமும் மேலும் ஒரு நாளைக்கு கதை பண்ணவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எனவே அவர்கள் எப்படி எப்படியெல்லாம் ஐடியா செய்து தொடர் பார்ப்பவர்களை இன்னும் கஷ்டப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.    

விஷேச நாட்களில் எல்லா தொலைக்காட்சி களிலும் ஒளிபர்ப்பப்படும் சிறப்பு  நிகழ்ச்சிகள் அனத்திலும் ஒரே மாதிரியே உள்ளன. எதிலும் புதுமைஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக வரஇருக்கும் திரைப்படங்களின் விளம்பர முன்னோட்டங்களாக பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளாக  நடிக நடிகையரின் ஏனோதானோ பேட்டிகளாகவே உள்ளன. அவரவர் தொலைக்காட்சியில் எது ஃபேமஸ் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதன் சிறப்பு நிகழ்ச்சி என்றும், முன்பே ஒளிபரப்பான திரைப்படங்களை சிறப்புத் திரைப்படங்கள் என்றும் போரடித்துவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வத்தையே குறைத்துவிடுவார்கள் போலிருக்கிறது





6 கருத்துகள்:

  1. தொடர்களை தொடர்வதில்லை... தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி (தொடர்களைத் தொடராததால் நேரம் வீணாகாது அதையே தொடருங்கள்)

      நீக்கு
  2. தொலைக் காட்சியில் செய்திகளை மட்டுமே பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. செய்திகள் மட்டுமே பார்ப்பது மிக மிக நல்லது. (நிகழ்ச்சிகளைப் பார்த்தால்தானே அவற்றை பற்றி எழுதமுடியும் அதனால் என்னை மன்னித்து விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். -- டீவி ஓடிக்கொண்டே இருக்கும் அவ்வப் பொழுது பார்த்துக்கொண்டிருப்பேன்)

      நீக்கு
  3. எதுக்குத்தான் இந்த தொடர்களை பார்க்கிறார்களோ தெரியலையே ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.