திங்கள், 7 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாள் ஆகுமா?


இந்த நாள்

இனிய நாள்

ஆகுமா?


இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் சனி ஞாயிறுகளில் சுகிசிவம் சன் தொலைக்காட்சியில் பேசி வருகிறார். தமிழகத்தில் தூங்க வைப்பதற்கு தாலாட்டு காலையில் எழுப்புவதற்கு திருப்பள்ளி எழுச்சி, இறந்தால் ஒப்பாரி என்று எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு. பாடப்பட்ட பாடலை வைத்து அது எந்த நேரத்தில் பாடப்பட்டது என்று சொல்லிவிட முடியும்..இப்படிப்பட்ட பாடல்கள் இன்று மேடைக்கச்சேரிகளாக மாறிவிட்டன. பங்கு பெறவேண்டிய மக்கள் இன்று பார்வையாளர்களாக உள்ளனர். என்று பல குறிப்புகளைச் சொன்னார் pசுகிசிவம். ஆனால் இது ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு.
எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக்கூடியவர்.சுகிசிவம். அவரது பேச்சைக் கேட்பவர்கள் சிறிதளவாவது அவர் பேசும் பிரச்சினை பற்றி யோசிப்பார்கள். இப்பகுதியை மறுஒளிபர்ப்பு செய்து அப்படிப்பட்டவரின் நேரத்தையும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நேரத்தையும் வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்? வாரத்தில் இரண்டு நாட்களே ஒளிபரப்பாகும் ‘இந்த நாள் இனிய நாள்’’ பகுதியைக்கூட புதிதாக ஒளிபர்ப்ப முடியாதா? நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இதுபற்றி யோசிப்பார்களா?  சுகிசிவத்தின் பேச்சை எதிர் பார்த்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு காலையிலேயே மறு ஒளிபரப்பைப் பார்த்தால் அந்த நாள் எப்படி இனிய நாள் ஆகும்??  



ஒரு வழியாக ஒரு மெகாத்தொடர் ‘உதிரிப்பூக்கள்’ முடித்து வைக்கப்பட்டது. இறந்து போன கதாநாயகி சக்கியும் இறந்து போன சக்தியின் தாயும் உயிரோடு இருக்கிறார்கள் என்று அவர்களை உயிரோடு கொண்டு வந்து நிறுத்தியதால் ஏதேதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் உப்புச்சப் பில்லாமல் ஏனோதானோ என்று எல்லாரும் திருந்திவிட்டார்கள் என்று தொடரை முடித்து விட்டார்கள்.
தொடரை எப்படியெல்லாம் நீட்டமுடியும் என்பதை இவ்வளவு வாரங்கள் பார்த்து வந்தவர்கள் கடைசி ஒரு வார காட்சிகளைப் பார்த்தால் தொடர் தயாரிப்பாளர்கள் நினைத்தால் ஒரு தொடரை எப்படி சீக்கிரம் முடிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.. மூன்று வில்லன்கள் ஒரே இடத்தில் இருந்தும் சிவநேசன் பேச்சைக் கேட்டு மனம் திருந்தி விடுகிறார்களாம். நிலா, நிலாவின் அப்பா, சக்தியின் மாமியார், சக்தியின் நாத்தனார்கள் எல்லோரும் திருந்திவிடுகிறார்களாம். எப்படியோ ஒருவழியாக தொடரை முடித்தார்களே என்று சந்தோஷப்படலாம்.    




8 கருத்துகள்:

  1. உதிரிப்பூக்கள் தெரியாது... சொல்வேந்தரை ரசிப்பதுண்டு... உங்களின் கேள்வியில் நியாயம் உள்ளது...

    பதிலளிநீக்கு
  2. திண்டுக்கல் தனபாலன்6 October 2013 21:01
    //உதிரிப்பூக்கள் தெரியாது... சொல்வேந்தரை ரசிப்பதுண்டு... உங்களின் கேள்வியில் நியாயம் உள்ளது//
    தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. சுகி சிவம் அவர்கள்.. எமக்கு/எனக்கு மட்டுமல்ல.. எங்கள் அக்கா, அண்ணன் குடும்பம் அனைவரும் அவரின் தீவிர ரசிகர்கள். அவர்களது காரில் ஏறினால்ல் இவரின் சிடி போய்க் கொண்டே இருக்கும்... பிரயாணம் முழுவதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. நானும் அவரது தீவிர ரசிகன். அவரது கருத்தைக் கேட்க முடியாத ஆதங்கம்தான் இப்பதிவு.

      நீக்கு
  4. சுகிசிவம் பேச்சு எப்பொழுதமே அருமையாகத் தான் இருக்கும்.
    அவர் இங்கே (பிரான்சு) வந்தால் எங்களுக்கு ஒவ்வொரு நாளுமே இனிய நாட்களாகத் தான் கழியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. பலரும் விரும்பும் சுகி சிவம் அவர்களின் பேச்சை புதிதாக பதிவு செய்து ஒளிபரப்புவதில் இவர்களுக்கு என்ன கஷ்டமோ புரியவில்லை.

      நீக்கு
  5. இந்த நாள் இனிய நாள் என்பது தொலைக் காட்சிக்குத்தானே தவிர நமக்கல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப் பார்த்தால் சரியாகத்தான் இருக்கிறது. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.