திங்கள், 15 மே, 2017

எப்படிப் பேசாமல் இருப்பது என்று கற்றுக் கொள்ளுங்கள்.

சின்னச் சின்ன சிந்தனைகள்

 மிக மிக நல்ல ஐடியாவுக்காக காத்திருக்காதீர்கள், உங்களிடம் உள்ள நல்ல ஐடியாவை செயல்படுத்துங்கள். அதைவிட நல்ல ஐடியாவும் மிக மிக நல்ல ஐடியாவும் தொடர்ந்து வரும்.

 இதயத்தில் சிங்கமாக இருங்கள் நரியின் தந்திரத்தை மறந்து விடாதீர்கள்.

 சிறிதாகவும் மெல்லிதாகவும் இருப்பது அழகாக இருக்கும். அது திறனுள்ளதாகவும், ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமானதாகவும் இருக்கும்.

 ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் விசுவாசமாகவும் நேர்மையாகவும் வேலை செய்தால், பதவி உயர்வு பெற்று ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை செய்யும்படி மேல் நிலைக்கு உயர்வீர்கள்.

வியாழன், 4 மே, 2017

அறிவாளி கோபப்படுவதால் விவேகத்தை இழக்கிறார்

சின்னச் சின்ன சிந்தனைகள்

ü     ஒரு சங்கிலியின் பலமில்லாத வளையம் பெரிய விபத்தை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே பலமில்லாத அந்த வளையத்தைக் கண்டுபிடியுங்கள், உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுங்கள்.

ü   ஒரு நாள் செய்வோம் என்றால் அந்த நாள் என்றுமே இல்லை இன்றுதான் அந்த வேலையைச் செய்யத் துவங்குவதற்கான நாள்.


ü   நான் தவறு செய்துவிட்டேன் என்று ஒத்துக் கொள்வது நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக வளர்ந்துள்ளீர்கள் என்று காண்பிக்கும் எளிய வழி.

திங்கள், 1 மே, 2017

கனவுகள் நனவாக தூக்கத்திலிருந்து விழித்து எழுங்கள்.

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

சின்னச் சின்ன சிந்தனைகள்
  • ஒரு நேரத்தில் ஒரு வேலை

  • பழையநிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் அதைத் திரும்பச் செய்யக்கூடாது. 
  • உங்கள் கனவுகள் நனவாக வேண்டுமா அதற்கு   சிறந்த வழி  தூக்கத்திலிருந்து விழித்து  எழுவதுதான். 

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நம் பிரச்சினை அறியாமையல்ல செயலாற்றாமையே!

நம் பிரச்சினை  அறியாமையல்ல செயலாற்றாமையே!

§  தன் வாயை மூடிக்கொண்டிருந்நால் மீனும்கூட பிரச்சினையில் (தூண்டிலில்) மாட்டிக் கொண்டிருக்காது.

§  அனுபவம் என்ற ஒன்றை நீங்கள் ஏதும் செய்யாமல் பெறமுடியாது.

§  பேசுவதற்கான திறமை நீங்கள் முன்னேறுவதற்கான குறுக்குவழி 

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தன்னம்பிக்கையை இழப்பதே மிகப்பெரிய இழப்பு

சின்னச் சின்ன சிந்தனைகள்

§  யோசியுங்கள் நிச்சயமாக நல்லதொரு வழி இருக்கும்

§  எதையும் எதிர் பார்த்து இருங்கள்

§  நற் சிந்தனைகள் நன்மையே பயக்கும்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

இடமறிந்து பேசுங்கள்

Ø  சிந்தித்துப் பேசுங்கள்.

Ø  சபை அறிந்து (இடம் அறிந்து) பேசுங்கள்

Ø  சமயம் அறிந்து பேசுங்கள்.

Ø  உண்மையையே பேசுங்கள்

புதன், 26 ஏப்ரல், 2017

நன்னம்பிக்கை நற்பயன் தரும்.

சின்னச் சின்ன சிந்தனைகள்         

·         1 யோசியுங்கள் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும்

·         2. எதையும் தள்ளிப் போடாதீர்கள் இன்றே செய்யுங்கள் இப்போதே செய்யுங்கள்

·         3. கேட்டால்தான் கிடைக்கும். (அழுகுற குழந்தைதான் பால் குடிக்கும்)