ஞாயிறு, 14 ஜனவரி, 2018

விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக செய்தியையே பலிகொடுப்பதா?

 விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக செய்தியையே பலிகொடுப்பதா?




சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே சரியான நேரத்தில் ஒளிபரப்பப் படுகின்றனவா என்றால் இல்லை ஒன்று நேரத்திற்கு முன்னதாகவே ஆரம்பித்து விடுவார்கள் அல்லது ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் தாமதமாக ஒளிபரப்பாகும்.
(விளம்பரதாரர்கள் இதை எப்படி ஏற்றுக் கொளிகிறார்கள் என்று தெரியவில்லை. டீவி பார்ப்பவர்களுக்கு (வியூயர்ஸ்) வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லையே!  மிகச்சரியான நேரத்தில் ஒளிபரப்பாவது ஒன்றே ஒன்றுதான் – அதுதான் செய்திகள்.
அப்படிப்பட்ட செய்திகளின் நேரத்தையே விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக மாற்றி விட்டார்கள். அதாவது இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த செய்திகளை விநாயகர் தொடர் துவங்கியபோது மாலை 6.00 மணிக்கு மாற்றிவிட்டார்கள்.
அலுவலகம் சென்று திரும்புபவர்கள் மாலையில் ஒளிபரப்பாகும் செய்தியைப் பார்க்க முடிவதில்லை என்று வருந்துகிறார்கள். அதைப் பற்றி நிர்வாகத் தினருக்கு என்ன கவலை>டி ஆர் பி ரேடிங்க் ஒன்றைமட்டுமே கருத்தில் கொண்டு செயல் படுவார்கள் போலிருக்கிறது.
முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் வெவ்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்பி வந்தார்கள். இப்பொழுதெல்லாம் மூன்று திரைப்படங்களை இடம் பெறச்செய்து விடுகிறார்கள். (புதுப்புது நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கு பதில் இது சுலபமான வேலையாகத் தெரிகிறது போலிருக்கிறது) அப்படி திரைப் படங்கள் இடம்பெறுவதால் வழக்கமாக இடம்பெறும் தொடர்களை நிறுத்திவிடுகிறார் கள். இப்போதோ மாலை நேர செய்தியையும் ஒளிபரப்பாமல் விட்டுவிடுகிறார்கள்ழ பொங்கலன்று சிறப்புத் திரைப்படம் பைரவா திரைப்படம் 6.30 க்கு முடிந்து மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவை ஒளிபரப்பத் துவங்கிவிட்டார்கள்.. வழக்கமாக இடம்பெறும் செய்தியை ஒளிபரப்பாமல் விட்டுவிட்டார்கள். இவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்கமுடியாது என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.


மெகா தொலைக் காட்சியில் கனவுகள் மெய்ப் பட என்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு சிற்றுரையாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் சிறப்புப் பேச்சை ஒளிபரப்பினார்கள். இது ஒரு அருமையான மக்கள் முன்னேற்றத் திற்கான நிகழ்ச்சி. இளைஞர்களும் மாணவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டியதொரு நிகழ்ச்சி இது.

2 கருத்துகள்:

  1. வியபதி ஐயா.. நலமாக இருக்கிறீங்களோ? உங்களைக் காணவில்லை எனத் தேடினேன் ... நீங்க இங்கு நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீங்க...

    பதிலளிநீக்கு
  2. நன்றி-- மறவதிருப்பதற்கும் பார்த்தவுடன் வருகைதந்து கருத்தை பதிவிட்டமைக்கும்.
    வீட்டு வேலைகள் காரணமாக எழுத இயலீமல் போனது
    இனி தொடர முயல்கிறேன், நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.