வியாழன், 8 ஜூன், 2017

தோல்வி என்பது தாமதமே

சின்னச் சின்ன சிந்தனைகள்

 

உலகின் மிகப் பெரிய நெருப்பு கூட சரியான நேரத்தில் அணைக்கப் பட்டால் ஒரு பக்கெட் தண்ணீரில் அணைத்துவிட முடியும்.

தேவையெனில் ரிஸ்க் எடுக்கலாம், அது அதிவேகமாக செயல்படுவதில் இருந்து மாறுபட்டது.

பெரும்பாலும் புள்ளிவிவரங்கள் ஒரு குடிகாரன் விளக்கு கம்பத்தை பிடித்துக் கொள்ளவதைப் போன்று உபயோகப்படுத்தப் படுகிறது அது தன் வழிக்கு வெளிச்சம் தருவதற்காக இல்லை அவனது தடுமாற்றத்தை மறைத்துக் கொள்ளவே பயன்படுத்தப் படுகிறது

ஒரு வேலையை தானே செய்பவருக்கு முடியாதது என்று எதுவுமே இல்லை.

உங்கள் முன்னோர்கள் பற்றி நீங்கள் பெருமை பட்டுக்கொள்கிறீர்களோ இல்லையோ அது ஒரு விஷயமே இல்லை, உங்களைப் பற்றி அவர்கள் பெருமை பட்டுக் கொள்ளமுடியுமா என்பதே மிக முக்கியம்.

வெளிச்சத்தைத் தருவதற்கு இரண்டு வழிகள் ஒன்று மெழுகுவத்தியாக இருப்பது அல்லது அதன் ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பது

ஒரு மனிதனிடம் திறமை என்னும் புதையல் மறைந்து கிடக்கிறது, தடைகள் போன்ற கஷ்டங்களும், பின்னடைவுகளும் அதை வெளிக் கொண்டு வருகின்றன.


தோல்வி என்பது தாமதமே தவிற உண்மாயான தோல்வியல்ல.   

7 கருத்துகள்:

  1. மிகச் சுருக்கமாக எனினும்
    மிக மிக அருமையாக...
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  2. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.