புதன், 1 ஜனவரி, 2014

சரியான முழு பதில் சொல்லவேண்டாமா?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


 என்ற நிகழ்ச்சியில் ‘’திரையுலகின் பொற்காலம் அன்றா இன்றா’’  என்ற நிகழ்ச்சி புதுயுகம் தொலைக் காட்சியில் புத்தாண்டு பிறப்பதற்கு முன் ரிஷிமூலம் இடம்பெற்றது. அதில் நடிகர்கள் ராஜேஷ், கணேஷ், நடிகைகள் கௌதமி, சுஹாசினி, அருணா, நித்யா ரவீந்திரன், இயக்குனர் கம் நடிகர்கள் மனோபாலா, ரமேஷ் கண்ணா, மதன் கார்க்கி இயக்குனர்கள் பிரசன்னா, லக்ஷ்மி, ஸ்ரீப்ரியா, ஸ்டில் ரவி, போன்ற திரைப்படத்துறையின் பலரும் கலந்து கொண்டு தம்தம் பங்கிற்கு கருத்துக்களைச் சொன்னார்கள்.   அன்று 4 மெலொடி 1 குத்துப் பாட்டு என்று இருந்தது இன்றோ 1 மெலொடி 4 குத்துப் பாட்டு என்று நிலை மாறியுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. எத்தனைப் பாடல்கள் இன்று நினைவில் நிற்கின்றன? இன்றைய தலைமுறைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு அபாரமானது. இதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார்கள்.  விமர்சகர்கள் சிலரையாவது அழைத்திருக்கலாமே. பல சுவையான சம்பவங்களைக் கேட்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது மட்டுமே லாபம். 
 சீரியல்களில் சில பல காரணங்களால் நடிகரோ அல்லது நடிகையோ தொடர முடியாமல் போகும் போது இவருக்குப் பதில் இவர் என்று அறிவித்து நடிக நடிகையரை மாற்றுவது பழக்கத்தில் உள்ளது.   ஆனால் இப்போதோ சில தொடர்களில் இயக்குனர்களையே மாற்றிவிடுகிறார்கள்.  இதைப் பற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படுவதில்லை. ஒரு தொடருக்கு இயக்குனர்தானே முக்கியமானவர். அப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் மாறும் போது முறையாக அறிவிக்க முயற்சி செய்வார்களா?
சன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நியழ்ச்சியில் இந்தியாவில் ‘’முதன் முதலாக எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு ரயில் விடப்பட்டது’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. பலர் பலவிதமான பதில்களைச் சொன்னாலும் ஒரே ஒரு பெண் மட்டும் ‘’1853 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி பம்பாயிலிருந்து முதல் ரயில் விடப்பட்டது’’ என்று மிகச் சரியாக பதில் சொன்னார். பம்பாயிலிருந்து என்ற பதில் சரிதான். பம்பாயிலிருந்து தானே வரை முதல் ரயில் விடப்பட்டது என்று சொல்லியிருக்க வேண்டும். சொன்ன பதில் பாதிதான் சரிஎன்றாலும் அதைச் சரி என்று கூறி விட்டுவிடுவதா? முழு பதிலையும் சொல்ல வேண்டாமா? அந்த சரியான விடையை சப் டைட்டில் போல எழுத்துவடிவத்தில் காட்டினால் பார்ப்பவர்களுக்கு சரியான விடையைத் தெரிந்து கொள்ள உதவுமே செய்வார்களா?  

4 கருத்துகள்:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுக்கு நன்றி...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.