விஜய் டீவியில் 'காபி வித் அனு' என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிக, நடிகையரின் பேட்டியை ஒளிபரப்பி வந்தார்கள். ஆனால் இப்போது அந்நிகழ்ச்சி காணாமல் போனது.
கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகி வந்த 'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கும் இதே கதிதான், திடீரென நிறுத்தப்பட்டது.
பொதிகையில் வாரியார் அவர்களின் மாணவி தேச மங்கையர்க்கரசி அருணகிரிநாதரின் ''முத்தைத்தரு பத்தித் திருநகை¸'' பாடலுக்கு ஒவ்வொரு சனிக் கிழமையும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
சன் டீவியில் ஓரிரண்டு நிகழ்ச்சிகளல்ல பல நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற முடிவு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சில: நிஜம், சங்கீத சங்கமம் , அசத்தப்போவது யாரு, டீலா நோடீலா?
தொலைக்காட்சி நிலையத்தார் எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் ஒளிபரப்பட்டும் எதை வேண்டுமானாலும் நிறுத்தட்டும் அது அவர்களது உரிமை என்று கூட அவர்கள் சொல்லலாம். அதற்குப் பல காரணங்கள் கூட இருக்கலாம்.. ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தும் போது அதற்கு பல வித விளம்பரங்கள் செய்யும் தொலைக்காட்சி நிலையத்தார் ஒரு நிகழ்ச்சியை முடிக்கும் போது அல்லது நிறுத்தும் போது அதற்கான காரணத்தை ஏன் அறிவிக்கக்கூடாது. அவர்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டீவி பார்க்கும் ரசிகர்களுக்காகத்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட ரசிகர்கள் ஒரு நிகழ்ச்சி ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறா? இனியாவது ரசிகர்களை மதித்து நடப்பார்களா?
இந்தியாவில் எல்லா அதிகம் எல்லா சேனல்களுமே லாப நோக்கத்தில்தான் நிகழ்சிகளை தயாரிக்கின்றனர். எனவே பார்வையாளர்கள் குறையும் பொழுது நிகழ்சிகள் உடனே நிறுத்தப் படுகின்றன. நாம் அனைவருமே மிக குறைவான கட்டணமே செலுத்தி 100 கும் அதிகமான சேனல்களை பார்க்கின்றோம். ஆனால் தரமான நிகழ்ச்சிகளை விளம்பரதாரர் உதவி இன்றி தயாரிப்பது மிக கடினம். லாப நோக்கம் மட்டுமே உள்ள பெரிய சேனல்கள் மிக மோசமான நிகழ்சிகளை அதிக விளம்பரங்களுடன் நம்மை பார்க்க வைத்து மூளை அகற்றும் சிகிச்சை செய்து வருகின்றன.
பதிலளிநீக்குஇங்கிலாந்து போன்ற நாடுகளில் தேசிய சேனல்களான BBC பார்பதற்கோ கேட்பதற்கோ இன்றும் லைசென்ஸ் பணம் கட்டி வருகின்றனர். அதனால்தான் அங்கே அதிக விளம்பரங்கள் இல்லாமல் தரமான நிகழ்சிகளை ஒலி/ஒளி பரப்ப முடிவதாக என்னுடன் பணி புரிந்த அந்நாட்டு சக பணியாளர் கூறினார்.
எனவே 90 % நிகழ்ச்சிகள் லாபம் குறைவதாலேயே நிறுத்தப் படுகின்றன. எந்த அறிவிப்பையும் எதிர் பார்க்காதீர்கள்...
ரொம்ப சரியா சொன்னீங்க..வியபதி மற்றும் ஷாகி
பதிலளிநீக்குதேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு"ரொம்ப சரியா சொன்னீங்க..வியபதி மற்றும் ஷாகி"
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி