திங்கள், 17 பிப்ரவரி, 2014

ஜப்பான் அணுகுண்டு வீச்சில் தப்பித்தவர்

சன் டி.டீ.எச்சில் (DTH)  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி களைப் பற்றிய விவரங்களை திரையின் கீழ்ப்பகுதியில் தருவார்கள். அதுபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப் பாகப் போகும் நிகழ்ச்சிகளாக “6.20 க்கு இந்த நாள் இனியநாள் என்றும் 6.30க்கு ராசிபலன்’’ என்றும் காண்பித்தார்கள் ஆனால் 6.20க்கு ஒளிபரப்பான நிகழ்ச்சி சாலமன் பாப்பையா வழங்கிய ‘அமுத மொழிகள்’’.  அவர்களுடைய சொந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையே தவறாகத் தருகிறார்கள் என்றால் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மேல் இவர்களுக்கு எவ்வளவு அக்கரை இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.  


(ஏற்கனவே பலமுறை ஒளிபரப்பப் பட்ட “வீணர்கள் பூண்டாலும் தங்கம்....... என்ற விவேக சிந்தாமணிப் பாடலுக்கான விளக்கத்தை இன்னமும் எத்தனை முறைதான் காண்பிக்கப் போகிறார்களோ?’  அமுத மொழிகளுக்குப் பஞ்சமா அல்லது நிகழ்ச்சிகள் மேல் இவர்கள் காட்டும் அக்கரை இவ்வளவுதானா??)

இதுதான் இப்படி என்றால் சுகிசிவம் அவர்கள் சொன்ன கேரட்பற்றிய அரிய தகவல்களையே மீண்டும் ஒளிபரப்பி போரடித்து விட்டார்கள்.   ஆனாலும் நேற்று அவர்சொன்ன தகவல் நம்மை கலங்க வைத்தது. ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட போது யாமகுச்சி என்ற ஜப்பானியர் ஒருவர் ஹிரோசிமாவிலும், நாகசாகியிலும் இருந்தார் இரு இடங்களிலும் ஏற்பட்ட அழிவுகளை நேரில் பார்த்தார் அணுகுண்டு வீச்சால் அவர் இறக்கவில்லை என்ற தகவலைக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது.  லட்சக்கணக்கான பிணங்களையும் இடிந்து போன கட்டிடங்களையும் பார்த்துவிட்டு நாகசாகியிலிருந்து தப்பி ஹிரோசிமா வந்தால் அங்கும் அணுகுண்டு விழுந்த தாம். எப்படியோ இரு இடங்களிலும் இறக்காமல் தப்பி இருக்கிறார். அவரை வைத்து ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று சொல்லியும் அவர் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லையாம். இது போன்ற தகவல்களை புத்தகங்கள் படிப்பதால் பெற முடியும் என்று புத்தகங்கள் படிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறினார் சுகி சிவம்.

மாதத்திற்கு ஒரு கதையாக ஒளிபரப்பாகும் பத்துமணிக் கதைகளில் சென்ற மாதம் ஒளிபரப்பான சிறு தொடர்  “எதிர் வீட்டுப் பையன்’’.  எதிர் வீட்டுக்கு ஒரு கல்யாணமாகாத பையன் வாடகைக்கு hdhdosகுடிவந்தால் நம் பெண்களுக்கு ஆபத்து என எண்ணி அவரைக் காலி செய்ய வைக்க முயற்சிப்பதும், அது தோல்வியடைவதும்தான் கதை. இடையில் ஒரு கொலை நடைபெற அது ஒரு சஸ்பென்ஸ் ஆக கதை நகர்ந்தது gls. ‘நாங்கள் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம் எல்லோருடனும் நட்பாகத்தான் பழகுகிறோம். மற்றவர்கள்தான் தவறாகப்புரிந்து கொள்கிறார்கள்’’ என்று இளையதலை முறையினரின் கருத்தை செய்தியாகச் சொல்லி இம்மாத கதை முடிந்தது. மற்றபடி சொல்ல ஏதுமில்லை.        

தந்தி தொலைக்காட்சியில் ‘நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியினை நடிகை சங்கீதா படு கேஷுவலாக நடத்தியது பாராட்டும்படி இருந்தது. விருந்தினர் கங்கை அமரனிடமிருந்து பல தகவல்களைப் பெற்றுத் தந்தது நிகழ்ச்சிக்கு சுவை கூட்டியது.


ஒரு பையன் அப்பாவிடம் ‘ஏம்பா எனக்கு கருப்பண்ணசாமினு பேர் வச்சீங்க?’’ அது குலதெய்வத்தின் பெயர் அதனால்தான் அதை வச்சோம்’’ என்று அப்பா விளக்கம் சொல்ல, ‘அப்ப  நீ ஏன் அதை வச்சுக்கல’’  என்று கேட்டானே ஒரு கேள்வி.  ஒரு சிறுவன் இமாம் அண்ணாச்சியிடம் ‘நீங்க கருப்பா இருந்தாலும் களையா இருக்கீங்க’’ என்று சொல்ல அண்ணாச்சி மிகவும் சந்தோஷமடைந்து விட்டார்..’’நீங்க கொரில்லா மாதிரி இருக்கீங்க’’ என்று அவன் தொடர.. அண்ணாச்சியின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. போலிருக்கிறது குட்டீஸ்களைப் பேச விட்டால் பேசிக்கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது.2 கருத்துகள்:

  1. சுகிசிவம் அவர்கள் புத்தகங்கள் படிப்பதன் முக்கியம் உணர்த்தியது அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி நன்றி

      நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.