செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

எம்.ஆர்.பி. விலைக்குமேல் விற்கலாமா?


“”சன்தொலைக்காட்சியில் இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த மெகாதொடர்களில் பெரும்பாலனவை சனிக்கிழமை களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. அதாவது மாலை 6.30 மணிமுதல் 9.00 மணி வரை ஒளிபரப்பப்படும் தொடர்கள் மட்டும் சனிக்கிழமைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளன. அதனால் இது ரொம்ப நாள் நீடிக்காது. உடனே சந்தோஷப் படாதீர்கள். சனிக்கிழமைகளில் 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு வேறு நேரங்களை ஒதுக்கிவிட்டு 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படும் தொடர்களையும் நீட்டித்துவிடுவார்கள் ஏனென்றால் அவற்றில் ராதிகா தொடரும் விகடன் தொடர்களும் உள்ளனவே””.

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இடம் பெறும் சில  தொடர்களை மட்டும் சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பத் தொடங்கிய போதே இது சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும் பிறகு மற்ற தொடர்களும் சனிக்கிழமைக்கு நீட்டிக்கப் படும் என்று எழுதியிருந்தேன். அது இப்போது நிஜமாகி விட்டது. சூப்பர் குடும்பம் முடிந்தவுடன் தென்றல் மற்றும் வாணி ராணி தொடர்களும் சனிக்கிழமைக்கு நீட்டிக்கப்பட்டுவிட்டன.. 


கதாநாயகனை அல்லது கதாநாயகி யையே இறந்து போனதாகக்காட்டி சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகு அவர் உயிரோடு இருக்கிறார் என்று கதையைத் தொடர்வது பற்றி இதையெல்லாம் யார் நம்புவார்கள் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். இப்பொழுது அதே பாணியில் வம்சம் தொடரின் கதாயாயகியான ரம்யாகிருஷ்ணன் இறந்து விட்டதாக கதைக்கிறார்கள்.  (அவர்தான் இத்தொடரின் தயாரிப்பாளர்கூட) இதை எப்படி பார்ப்பவர்கள் நம்புவார்கள் என இயக்குனர் நினைக்கிறார்? பூ சுற்றுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

இதை எழுதிய ஒரு வாரத்திற்குள்ளாகவே நான் சொன்னது நடந்துவிட்டது. அதாவது கதாநாயகி ரம்யா கிருஷ்ணன் மருத்துவ மனை ஒன்றில் ஐ சி யூ வில் இருக்கிறார் உயிரோடு தான் இருக்கிறார் என்று காண்பித்துவிட்டார்கள். இப்படிப்பட்ட சஸ்பென்ஸ் தேவையா?

நீனா நானாவில் ஓட்டல்களில் அதிகமான விலை வைத்து விற்பதைப்பற்றிய விவாதம் நடந்தது.  நட்சத்திர ஹோட்டல்களில் தரமான குடிதண்ணீர் தரவேண்டியது அவர்களின் பொறுப்பு. வாடிக்கையாளர்கள் வேண்டுமென்று கேட்டால் பாட்டில் நண்ணீர் தரலாம். ஆனால் அவர்களோ பாட்டிலில் அடைக்கப் பட்ட குடிநண்ணீரைத்தான் தருகிறார்கள். அதுவும் எம் ஆர் பி விலையில் தருவதில்லை. மிக அதிகமான விலைக்கு விற்கிறார்கள் இது எப்படி நியாயமாகும் என்று ஒருவர் கேட்டார். ‘’ஓவர்ஹெட் காஸ்ட் அதிகம். அதனால் அதிக விலையில் விற்கிறோம் ‘’ என்று சப்பைகட்டு கட்டுகிறார்கள். எங்குமே ஒரு பொருளை எம் ஆர் பி விலைக்குமேல் அதிகமான விகையில் விற்கக்கூடாது என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாதா? இனியாவது விலை குறிப்பிடப் பட்ட பொருள்களை எம் ஆர் பி விலைக்கு தர நடவடிக்கை எடுப்பார்களா?சன் தொலைக்காட்சியின் குட்டி சுட்டிஸ் நிகழ்ச்சியில் இவ்வாரம் நான்கு குட்டீஸ் வந்திருந்தாலும் அண்ணாச்சி இரு குழந்தைகளிடம் மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் மற்ற இரு சிறுவர்களையும் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டார்.  அந்த இரு சிறுமிகள் மிக ஆழகாக பேசினார்கள் என்றாலும் மற்றவர்களிடமும் சில கேள்விகளாவது கேட்டிருக்கலாம். இப்படி சிறுவர்களை ஏங்கும்படி ஏமாற்றலாமா?’  .

4 கருத்துகள்:

 1. குட்டிஸ் சுட்டிஸ் நிகழ்ச்சியில் நீங்கள் சொல்வது போல் தான் எனக்கும், வீட்டிலும் நினைப்போம்... எவ்வளவு அழகாக பேசுகிறார்கள் குட்டிஸ் சுட்டிஸ்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மேலான கருத்தினை பதிவு செய்தமைக்கும் நன்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல ரசிக்கும் படியான மழலைகள் தான்.

   நீக்கு
 2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி. தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி

   நீக்கு

தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.