செவ்வாய், 24 டிசம்பர், 2013

சிரிக்க வைக்க என்ன செய்யலாம்?

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அது இது எது என்னும் நிகழ்ச்சியில் சிரிச்சாப் போச்சு பகுதியில் சிரிக்க வைக்க வருகிறவர்கள் தம் நகைச்சுவைத் திறமையைக் காண்பித்து விருந்தினர்களை சிரிக்கவைக்க வேண்டும். ஆனால் அதில் வருகிறவர்கள் விருந்தினர் அருகில் போய்நின்று கிச்சுகிச்சு மூட்டாத குறையாக சிரிங்க சிரிங்க என்று சொல்வதும் டேபிளில் இருந்து கையை எடுக்காதே என்று சொல்வதும் சரியில்லையே! இனியாவது இவற்றை அனுமதிக்காமல் தூர இருந்தே சிரிக்க வைக்க முயற்சிப்பார்களா?


சன் தொலைக்காட்சியில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களைப் பற்றிய சிறப்பு தகவல்களை தந்தார் சுகிசிவம் அவர்கள். அவருக்கு சீராச்செல்வர் என்ற பெயர் உண்டு- சீராப் புராணத்தின் விளக்கங்களைச் சொல்வதாலும் சீராதவர் (கோபப்படாதவர்) என்பதாலும் அப்பெயர் அவருக்குப் பொருத்த மானதே என்றும் அவர் கூறியவை இதற்குமுன்னதாக இருமுறை ஓளிபரப்பப் பட்டதே! (நான் பார்க்காத போது எத்தனைமுறை ஓளிபரப்பானதோ அது எனக்குத் தெரியாது). கிருஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியிலும் அவரது உரை இடம்பெறும் என்று விளம்பரப் படுத்துகிறார்களே அதையாவது புதிதாகப் பதிவு செய்து ஒளிபரப்புவார்களா அல்லது அதையும் முன்பு ஒளிபரப்பியதைத் தேடிப்பிடித்து மறுஒளிபரப்புச்செய்வார்களா?

சன்தொலைக்காட்சியின் தெய்வமகள் தொடரில் தாரிணியை வெகுளியாக அப்பாவியாக சித்தரித்து வந்தார்கள். இப்போதோ அவரை ரொம்ப விவரமான வராகக் காண்பிக்கிறார்கள். தாரிணி தன் மாமியாருடன் வரும் வழியில் பிரகாஷின் அண்ணியை பார்த்தபோது அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, வீட்டில் அதுபற்றி விசாரிக்கும் போது தான் அப்படி காலில் விழவில்லை என்று சாதிக்கிறார்.  வெகுளியான தாரிணி நிச்சமாக இப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டாள். கதையை சுவாரஸ்யமாக்க இப்படி பாத்திரத்தின் குணத்தையேவா மாற்றுவது. தொடர் என்றால் எதையும் பார்க்க க்கூடாதோ!

------------------------------------------------------------------------
தினத்தந்தி தொலைக் காட்சியில் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் வெட்டியான் வேலைபார்க்கும் பிதாமகள்களை சந்தித்துப் பேசினார் குஷ்பு. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் வேலையை மிகத்தைரியமாக செய்யும் அவர்கள் அந்த வேலையை ஒரு தர்மமாகவே செய்வதாகச் சொன்னார்கள். ‘எங்களுக்கு உடம்புக்கு ஏதும் வந்தால் எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் கேட்டதில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. அரசு சார்பில் வேலை செய்யும் அவர்களுக்கு அரசு ஏதும் உதவலாமே. 

சனி, 7 டிசம்பர், 2013

மறு ஒளிபரப்புச் செய்ய ஒரு வேண்டுகோள்



சன் தொலைக்காட்சியில் சாம்பியன் நிகழ்ச்சியில் நன்கு தம் திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு நிகழ்ச்சியின் நடுவர்கள் இருவரும் ஆளுக்கு 5000 புள்ளிகள் வீதம் மொத்தம் 10,000 புள்ளிகள் தந்து அதை அப்பிடியே பணமாக மாற்றி ரூபாய் 10,000 க்கான காசோலையை தந்தது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. ஆனால் சில சமயங்களில் மாற்றுத்திறனாளிகள் நால்வராக அல்லது ஐவராக வந்து தங்கள் திறமையை காண்பிக்கும் போதும் அவர்களுக்கும் அதே ரூபாய் பத்தாயிரத்தைதான் தருகிறார்கள். இது சற்று நெருடலாக இருந்தது.. அந்த நிகழ்ச்சியின் சார்பாக கொடுக்கும் அந்த தொகை நியாயமானதாக இருக்கலாம். அந்த நேரங்களில் சன் தொலைக்காட்சியின் சார்பாக அந்த வெகுமதி இல்லாமல் சற்று கூடுதலாக ஒரு தொகையை அந்த திறமைசாளிகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு இது ஒரு ஊக்குவிப்புத் தொகையாக மட்டுமில்லாமல் உதவித்தொகையாகவும் அமையுமே. இதை சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலனை செய்வார்களா?
முன்பே குறிப்பிட்டது போல அமுதமொழிகளில் சாலமன் பாப்பையா ஏற்கனவே சொன்ன விவேக சிந்தாமணியின் தாய் பகையானால் விளக்கத்தை மீண்டும் ஒளிபரப்பி, சுகிசிவம் அவர்கள் சொன்ன சிலம்பொலி செல்லப்பா அவர்களின் பெருமையையும் மறு ஒளிபரப்பு செய்தார்கள். காலையில் எழுந்து ஆவலுடன் இந்நிகழ்ச்சிகளை பார்க்க டீவி முன் உட்காருபவர்களை இப்படி எத்தனை நாட்களுக்குத் தான் ஏமாற்றுவார்களோ தெரியவில்லை. (ஏமாற நீங்கள் எல்லாம் இருக்கும் வரை என்று சொல்வது என் காதுகளில் விழுகிறது) இத்தகவல்கள் விழ வேண்டியவர்கள் காதுகளில் விழாதது ஏன் என்றுதான் புரியவில்லை. (ராசிபலன்களும் இப்படிப்பட்ட மறு ஒளிபர்பாகத்தான் இருக்குமோ!)
சன் செய்திகளில் சிறப்புப் பார்வையில் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரழப்புகள் பற்றியும், விபத்துக்களுக்கான காரணங்கள் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமூறைகள் பற்றியும் விளக்கினார்கள். மிகவும் பயனுள்ள அலசல் இது.  எதை எதையோ மறு ஒளிபரப்புச் செய்பவர்கள் இதை மறுஒளிபரப்புச் செய்தால் ஓரிரு விபத்துக்களாவது குறையுமே!  (ஜனவரிமாதம் முதல்வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக அகில இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே அந்த நேரத்தில் இவற்றை ஒளிபரப்புச் செய்து அந்நிகழ்வில் சன் தொலைக்காட்சியும் பங்கேற்கலாமே)




தெய்வமகள் தொடரில் காலம்தான் சிலவிஷயங்களுக்கு தீர்வு சொல்லவேண்டும் என்று சொல்லும் சுரேஷ் காலத்திற்காக பொறுத்திருக்காமல் ‘’இந்த நேரத்தில் தாரிணி கழுத்தில் தாலி கட்டுகிறேன்’’ என்று கூறி கோவிலில் உறவினர் யாரும் இல்லாத நிலையில் தாரிணியைத் திருமணம் செய்து கொள்கிறானாம். ‘’எனக்குத் தெரியாமல் என்னைத்தூக்கி வந்துவிட்டீர்கள். நான் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டேன்’’ என்று கூறி தாரிணியை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தால்தான் அவனது பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கும். இப்படி ஒரு பாத்திரத்தை ஒரு விதமாக சித்தரித்து திடீரென வேறு விதமாக மாற்றுவது இயக்குனர் குமரனுக்கு வாடிக்கைதானே (இதற்கு (திருமதி) செல்வமே நல்ல உதாரணம்)  .